வித்தியாசமாகவும் புதுமையாகவும் புகைப்படங்களை வெளியிடுவதில் விகடனுக்கு நிகர் விகடனே...அதில் வரும் புகைப்படங்களைபார்த்தே நாம் போட்டாஷாப்பில் புதுமையான டிசைன்களை கற்றுக்கொள்ளலாம். அப்படிதான் சில வருடங்களுக்கு முன்னர் (சுமார் 4 வருடங்களுக்கு முன்னர்) விகடனில் ஒரு மனிதர் அவருடைய தலையை கையில் வைத்துள்ளதாக படம் வெளிவந்தது. அது எப்படி செய்திருப்பார்கள் என யோசித்து அப்போதே நான் செய்துபார்த்த புகைப்படங்கள் இது. இனி இதை எப்படி நாம் கொண்டுவரலாம் என பார்க்கலாம்.முதலில் கையை தனியே வைத்து புகைப்படம் எடுத்துக்கொள்ளவும். படம் கீழே:-
அதைப்போலவே முகத்தை பிடிததுள்ளதுபோல் மற்றும் ஒரு புகைப்படம் எடுத்துக்கொள்ளவும். ஆனால் இருக்கும் போசிஷன் மாறக் கூடாது.கை மட்டும் தான் மாற வேண்டும்.இப்போது பென் டூல் மூலம் இரண்டாவது படத்தில தலையை மட்டும் கட் செய்து பின்னர் மூவ் டூல் மூலம் நகர்த்தி பின்னர் டிரான்ஸ்பார்ம் டூல்(Ctrl+T -அழுத்தினால் வரும் டூல்) மூலம் சரியாக பொருத்தவும். கீழே உள்ள புகைப்படத்தை பாருங்கள்.
இதைப்போல மற்றும் ஓரு புகைப்படம் கீழே:-
குறிப்பிட்ட வயது வரைதான் மகன்கள் நமக்கு குழந்தை.நமக்கு 60 வயதாகிவிட்டபின் நாம்தான் அவர்களுக்கு குழந்தை.அதை உணர்த்தவே இந்த புகைப்படம்.முதலில் புகைப்படம் எடுத்துக்கொள்ளவும்.
இப்போது மகன் படத்தை பென்டூலால் கட் செய்து மூவ் டூலால் நகர்த்தி எனது தலையில பொருத்தவும்.கீழே உள்ள புகைப்படத்தை பாருங்கள்.
இப்போது எனது புகைப்படத்தை கட் செய்து அதைப்போல நகர்த்தி எனது மகன் தலையில் வைத்து டிரான்ஸ்பார்ம் டூலால் அட்ஜஸ்ட் செய்ய வேண்டும். கீழே உள்ள புகைப்படத்தை பாருங்கள்.
பார்க்க வேடிக்கையாக இருக்கலாம்.போட்டாஷாப் என்றாலே வேடிக்கையும் கற்பனையும் தானே. போட்டாஷாப்பில இதை ஒர்க் செய்து பாருங்கள்.பதிவின் நீளம் கருதி இத்துடன் முடித்துக்கொள்கின்றேன்.வாழ்க வளமுடன்.
வேலன்.
JUST FOR JOLLY PHOTOS:-
குளோசப் உபயோகிக்க சொன்னால் உபயோகிக்காமல் இப்படி குளோசப்பில் வந்து வாயை பிளக்கிறேயே....!
இன்றைய PSD டிசைன் புகைப்படம் கீழே:-
டிசைன் செய்தபின் வந்த புகைப்படம் கீழே:-
இதனை பதிவிறக்க இங்கு கிளிக் செய்யவும். பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்









" border="0" alt="Photobucket" />" border="0" alt="velan" /> />