வேலன்:-200 ஆவது பதிவும் -எனது பிறந்த நாளும்

அனைத்து நண்பர்களுக்கும் வணக்கம். இன்று பதிவில்
இரண்டு முக்கிய விஷேஷங்கள். முதல் விஷேஷம் இத்துடன்
எனது பதிவு 200 -ஐ தொட்டுவிட்டது. பிறக்கும்போது
கொண்டுவரவில்லை.இறக்கும்போதும் கொண்டு செல்ல
போவதுமில்லை. இருக்கும் வரை மற்றவர்களுக்கு நம்மால்
முடிந்ததை செய்வோம்.விளையாட்டாக ஆரம்பித்து இன்று
200 பதிவை அடைந்துவிட்டேன். இதுவரை சுமார் 275 பின்
தொடர்பவர்கள் உள்ளனர். 51,000 பார்வையாளர்கள் இதுவரை
எனது தளத்திற்கு வந்துசென்று உள்ளனர்.ஒருபுறம் மகிழ்ச்சியாக
இருந்தாலும மறுபுறம் பயமாகவும் உள்ளது. எனக்கு தெரிந்த
விஷயங்களை உங்களுடன் பகிர்ந்துகொள்கின்றேன்.எனக்கு
தெரியாததையும் சொல்லிதாருங்கள்.கற்றுக்கொள்கின்றேன்.
இணையதளம் மூலம் நிறைய நண்பர்கள் கிடைத்துள்ளார்கள்.
உண்மையில் நான் மிக்க அதிர்ஷ்டக்காரன் தான்.
அடுத்த வி்ஷேஷம் இன்று எனது பிறந்தநாள்
02.12.2009. உங்கள் அன்பையும ஆசிர்வாதத்தையும் வேண்டி...

என்றும் அன்புடன்
வேலன்.


இது டூ-ன்- ஓன் புகைப்படம். பர்த்டேவுக்கும் ஆச்சு...
200 வது பதிவிற்கும் ஆச்சு.....


இனி இன்றைய பதிவினை பார்க்கலாம்.
கடுகு சிறியது ஆனால் காரம் குறையாது என்று சொல்வார்கள்.
அதுபோல் இது வெறும் 1.5 எம்.பி. அளவு உள்ள சாப்ட்வேர்தான்.
படங்களை பார்ப்பது மட்டும் அல்லாமல் அதை தம்ப்நெயில்
வியுவில் பார்க்கலாம். படங்களை எடிட் செய்ய முடியும்.
டிஜிட்டல் கேமராவிலிருந்து நேரடியாக இந்த சாப்ட்வேருக்கு
கொண்டுவரமுடியும். போட்டாக்கள் மூலம் ஸ்லைட்ஷோ
உருவாக்கலாம். பார்மட்டுகளை எளிதாக மாற்றலாம். ஒரே
கட்டளை மூலம் வேண்டிய அளவினை அனைத்துபடங்களுக்கும்
கொண்டு வரலாம். நீங்கள் பார்க்கும் படம் பிடித்திருந்தால் அதை
வால்பேப்பராக கொண்டுவரமுடியும். இமெஜ் பைல்தவிர
ஆடியோ -வீடியோவும் இதில் பார்க்கலாம்.
இனி இதில் என்ன என்ன வசதிகள் உள்ளன என பார்க்கலாம்.
இதை பதிவிறக்க இங்கு கிளிக் செய்யவும்.

நேரம் இன்மைகாரணமாக என்னால் ஒரளவிற்கே இதில்
உள்ள வசதிகளை காண முடிந்தது. நண்பர்கள் இந்த
சாப்ட்வேரை முழுவதும் அலசி ஆராய்ந்து பார்த்துவிடுங்கள்.
முதலில் நீங்கள் படங்கள் உள்ள போல்டரை திறந்து
கொள்ளுங்கள். அடுத்து பைல் டேபை கிளிக் செய்து
அதில் உள்ள தம்ப் நெய்ல் கிளிக் செய்யுங்கள். கீழே
உள்ள படத்தை பாருங்கள்.
இப்போது உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.


அடுத்துள்ள ஸ்லைட்ஷோ கிளிக் செய்யுங்கள். அல்லது கீ-
போர்டில் W -Key கிளிக் செய்யுங்கள். கீ்ழே உள்ள படத்தை
பாருங்கள்.

உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.

இதில் உள்ள படங்களை Add செய்து வேண்டிய செட்டிங்ஸ்
சேர்த்து ஸ்லைட் ஷோ பாருங்கள்.
அடுத்துதான் முக்கியமான வசதி.... பைல் டேபில்
Batch Conversion/Rename கிளி்க் செய்யுங்கள்.அல்லது
கீ-போர்டில் B -Key அழுத்துங்கள். கீழே உள்ள படத்தை
பாருங்கள்.

உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.

இதில் மொத்தம் மூன்று ரேடியோ பட்டன்கள் இருக்கும்.
Batch Conversion,Batch rename,Batch Conversion/Rename result
file என வேண்டியதை தேர்வு செய்யுங்கள்.
முதலில் உள்ள Batch Conversion கிளிக் செய்து அதில்
நீங்கள் மாற்றவேண்டிய பைல் பார்மட்டை தேர்வு
செய்யுங்கள். கீ்ழே உள்ள படத்தை பாருங்கள்.

அதைப்போல் நீங்கள் உங்கள் படத்தின் பெயர்களை
எளிதில் மாற்றிவிடலாம் கீழே உள்ள படத்தை பாருங்கள்.

இதனை நீங்கள் கிளிக் செய்திடும் சமயம் உங்களுக்கு
தேர்வு செய்த படத்துடன் பெயரும் வரும். தேவையான பெயரை
தட்டச்சு செய்து ஓ.கே.கொடுங்கள்.
அடுத்து எடிட் டேபிற்கு சென்று அதில் உள்ள
Show Paint dialog அல்லது F12 அழுத்துங்கள். உங்களுக்கு:
கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
உங்களுக்கு பெயிண்ட்டில் உள்ள வசதிகளுடன் டூல் கிடைக்கும்.
கீழே உள்ள படத்தை பாருங்கள்.

வேண்டிய டூல் எடுத்து வேண்டியதை செய்து
கொள்ளுங்கள்.அதேப்போல் எடிட்டில் உள்ள
கிராப் வசதியை பயன்படுத்திபர்ருங்கள்.
அடுத்துள்ளது Image Tap கிளிக் செய்ய உங்களுக்கு
கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.

இதில் முதலில் உள்ள image information கிளிக் செய்ய
உங்களுக்கு கீழ்கண்ட விண்டொ ஓப்பன் ஆகும்.

இதில் உங்கள் புகைப்படத்தின் மொத்த ஜாதகமே வந்து
விடும். தேவையான விவரங்கள் பார்த்துக்கொள்ளலாம்.
அடுத்துள்ள image nagative கிளிக் செய்ய உங்களுக்க
உங்களது படம் கீழ்கண்டவாறு மாறிவிடும்.

அடுத்துள்ள Color Corrections கிளிக் செய்ய உங்களுக்கு கீழ்கண்ட
விண்டோ ஓப்பன் ஆகும்.

தேவையான மாற்றங்கள் செய்துகொள்ளுங்கள்.
அடுத்துள்ளது image effects கிளிக் செய்ய உங்களுக்கு கீழ்கண்ட
விண்டோ ஓப்பன் ஆகும்.

உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். தேவையான
Effect தேர்வு செய்து உடன் ப்ரிவியு பார்த்துக்கொள்ளலாம்.

அடுத்துள்ள Options கிளிக் செய்கையில் உங்களுக்கு கீழ்கண்ட
விண்டோ ஓப்பன் ஆகும்.


இதில் ஸ்கிரீன் ஷாட் முதல் நிறைய வசதிகள் உள்ளது.
தேவையானதை பயன்படுத்திப்பாருங்கள்.
அடுத்து வியு டேபை கிளிக் செய்யுங்கள்.


கீழ்கண்ட விண்டோவில் உள்ள வசதிகளை பயன்படுத்தி
பாருங்கள்.
படத்தின் தேவையான பகுதியை மட்டும் வேண்டிய அளவு
வெட்டி எடுக்கலாம்.கீழே உள்ள விண்டோவை பாருங்கள்.



பதிவின் நீளம் கருதி இத்துடன் முடிக்கின்றேன்.பயன்படுத்தி
பாருங்கள்.

வாழ்க வளமுடன்,

வேலன்.



JUST FOR JOLLY PHOTOS:-


இன்று பர்த்டே ஸ்பெஷலுக்கான புகைப்படம்

இன்றையPSD Design-34 புகைப்படம் கீழே:-



டிசைன் செய்தபின் வந்த படம் கீழே:-



இதை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.


வந்து வாழ்த்துக் கூறியவர்கள் இதுவரை:-

web counter



பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

83 கருத்துகள்:

KayKay சொன்னது…

பிறந்த நாள் வாழ்த்துகள் வேலன்.

இன்று போல் என்றும் மகிழ்ச்சியுடன் வாழ இறைவனை பிராத்திக்கிறேன்

-- கிருஷ்ணா

நாஞ்சில் பிரதாப் சொன்னது…

பிறந்தநாள் மற்றும் 200 வது பதிவுக்கு வாழ்த்துக்கள்.

பதிவைப்போல 200 ஆண்டுகள் வாழ வாழ்த்துக்கள். (ரொம்ப ஓவரா இருக்கோ...)

பதிவு ரொம்ப பயனுள்ளதாக இருந்தது. நான் தரவிறக்கிவிட்டேன்...நன்றி திரு. வேலன்

யாழ் பறவை சொன்னது…

piRaNthaNaaL vaazhththukkaL thiru vElan..
unGkaL muyaRchi thodara enthu vaazhththukkaL......

Tech Shankar சொன்னது…

Happy Birthday to you sir.
இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் தலைவரே
என்றும் அன்புடன் வாழ்க வளமுடன்
த.நெ.

♠புதுவை சிவா♠ சொன்னது…

பிறந்த நாள் வாழ்த்துகள் வேலன்

வாழ்க வளமுடன்!

வாழ்க வளமுடன்!!

வாழ்க வளமுடன்!!!

யோகன் பாரிஸ்(Johan-Paris) சொன்னது…

நலமுற வாழ இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

Dr.P.Kandaswamy சொன்னது…

வாழ்த்துக்கள்.

நிகழ்காலத்தில்... சொன்னது…

பிறந்தநாள் மற்றும் 200 வது பதிவுக்கு வாழ்த்துக்கள் வேலன்

வாழ்க வளமுடன்!

வாழ்க வளமுடன்!!

வாழ்க வளமுடன்!!!

Sai சொன்னது…

Happy Birthday Velan

வேலன். சொன்னது…

நான் ஒரு விவசாயி! கூறியது...
பிறந்த நாள் வாழ்த்துகள் வேலன்.

இன்று போல் என்றும் மகிழ்ச்சியுடன் வாழ இறைவனை பிராத்திக்கிறேன்

-- கிருஷ்ணா//

நன்றி நண்பர் கிருஷ்ணா அவர்களே...
வாழ்க வளமுடன்,
வேலன்.

வேலன். சொன்னது…

யாழ் பறவை கூறியது...
piRaNthaNaaL vaazhththukkaL thiru vElan..
unGkaL muyaRchi thodara enthu vaazhththukkaL..

நன்றி யாழ்பறவை அவர்களே...
வாழ்க வளமுடன்,
வேலன்.

வேலன். சொன்னது…

நாஞ்சில் பிரதாப் கூறியது...
பிறந்தநாள் மற்றும் 200 வது பதிவுக்கு வாழ்த்துக்கள்.

பதிவைப்போல 200 ஆண்டுகள் வாழ வாழ்த்துக்கள். (ரொம்ப ஓவரா இருக்கோ...)

பதிவு ரொம்ப பயனுள்ளதாக இருந்தது. நான் தரவிறக்கிவிட்டேன்...நன்றி திரு. வேலன்ஃஃ

நன்றி நண்பர் பிரதாப் அவர்களே..
வாழ்க வளமுடன்,
வேலன்.

வேலன். சொன்னது…

♠புதுவை சிவா♠ கூறியது...
பிறந்த நாள் வாழ்த்துகள் வேலன்

வாழ்க வளமுடன்!

வாழ்க வளமுடன்!!

வாழ்க வளமுடன்!!!

நன்றி சிவா சார்....
வாழ்க வளமுடன்,
வேலன்.

வேலன். சொன்னது…

தமிழ்நெஞ்சம் கூறியது...
Happy Birthday to you sir.
இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் தலைவரே
என்றும் அன்புடன் வாழ்க வளமுடன்
த.நெ
தங்கள் வாழ்த்துக்கு நன்றி சார்...
வாழ்க வளமுடன்,
வேலன்.

வேலன். சொன்னது…

Dr.P.Kandaswamy கூறியது...
வாழ்த்துக்கள்ஃஃ

நன்றி டாக்டர்

வாழ்க வளமுடன்,
வேலன்.

வேலன். சொன்னது…

யோகன் பாரிஸ்(Johan-Paris) கூறியது...
நலமுற வாழ இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

நன்றி யோகன் பாரிஸ் அவர்களே...
வாழ்க வளமுடன்,
வேலன்.

வேலன். சொன்னது…

Sai கூறியது...
Happy Birthday Velan


நன்றி நண்பரே...
வாழ்க வளமுடன்,
வேலன்.

வேலன். சொன்னது…

நிகழ்காலத்தில்... கூறியது...
பிறந்தநாள் மற்றும் 200 வது பதிவுக்கு வாழ்த்துக்கள் வேலன்

வாழ்க வளமுடன்!

வாழ்க வளமுடன்!!

வாழ்க வளமுடன்!!!

நன்றி நண்பரே...
வாழ்க வளமுடன்,
வேலன்.

Dr.Rudhran சொன்னது…

hearty wishes for your happiness. i am one of the many who learn a lot through your blogs. keep writing and grow in happiness

அன்புடன் அருணா சொன்னது…

பூங்கொத்துக்களுடன் 200க்கும் ,பிறந்தநாளுக்கும் வாழ்த்துக்கள்!

♠ ராஜு ♠ சொன்னது…

இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் பாஸ்..

கிருஷ்ணா (Krishna) சொன்னது…

வாழ்த்துக்கள். அனைத்திற்கும்.
நன்றி.

ந.முத்துக்குமார்-சிங்கப்பூர் சொன்னது…

அன்புடன் பிறந்த நாள் வணக்கங்கள் வேலன் சார்,

இன்றுபோல் என்றும் எதையும் வென்றும் அன்றும் இன்றும் என்றும் மனதில் மகிழ்ச்வெள்ளம் பொங்கும்
அதி்ல் உங்கள் புகழ் என்றும் ஓங்கும்.....

என்றும் எங்களுக்கு புதுப்புது விஷயங்களை அள்ளித்தந்தும்,
தெளிவாய் மிக எளிதாய் தமிழில் எழுதியும் எங்களை சந்தோஷப்படுத்தும் உங்களுக்கு அந்த இறைவன் இன்றுபோல் என்றும் பலமடங்கு சந்தோஷங்களை வழங்க
வேண்டுமென அவனை வணங்கி
உங்களை வாழ்த்த வயதில்லாவிட்டாலும்
வளர துணைநிற்போம் என்றும் நாங்கள் .........

வாழ்க வளமுடன்
என்றும் நட்புடன்
ந.முத்துக்குமார்

ந.முத்துக்குமார்-சிங்கப்பூர் சொன்னது…

200வது பதிவிற்கு மனம்கனிந்த வாழ்த்துகள் வேலன் சார்,

இன்றுபோல் என்றும் நன்றாய் நல்ல தமிழில் பதிவிட இருநூறு என்ன இரண்டாயிரத்தையும் எட்டிவிட அதையும் தாண்டி என்றும் இன்னும் நான்றாய் தொடர்ந்திட வாழ்த்துகள்.


வாழ்க வளமுடன்
என்றும் நட்புடன்
ந.முத்துக்குமார்

யூர்கன் க்ருகியர் சொன்னது…

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் சார்.

ரோஸ்விக் சொன்னது…

பிறந்தநாள் மற்றும் 200 வது பதிவுக்கு வாழ்த்துக்கள் நண்பரே! டூ இன் ஒன் படமும் அருமை. இளவட்ட ஃபிகரா இருந்தா இன்னும் அருமையாக இருக்கும். :-))

உங்கள் இடுகை வழக்கம்போல் தொழில்நுட்பத்தில் கலக்கல் தான். தொடரட்டும்.

ரஹ்மான் சொன்னது…

இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்

200 வது பதிவு இந்த இனிய பிறந்த நாளில் முடித்துள்ளீர்கள். அடுத்த ஆண்டு இதே நாளில் 2000 வது பதிவை நிறைவடைய வாழத்துக்கள்.

Uday சொன்னது…

happy birthday velan

வடிவேலன் ஆர். சொன்னது…

தல வாழ்த்துக்கள் தல இன்று போல் தினம் ஒரு பதிவிட்டு பதிவுலகத்தில் நீங்கா இடம் பிடிக்க வாழ்த்துக்கள் 200 ஒரு மைல்கல் கூடிய விரைவில் 2000 ஒரு மைல்கல்லை அடைய வாழ்த்துக்கள்

டவுசர் பாண்டி சொன்னது…

உங்க 200 பதிவுக்கும் , அப்பால உங்க பொறந்த நாளுக்கும் வாழ்த்துக்கள் தலீவா !! கலக்குங்க தல ,

Anonymous சொன்னது…

இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்!

மற்றும் 200 வது பதிவுக்கு வாழ்த்துக்கள்!ங்க.

Thomas Ruban சொன்னது…

இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் மற்றும் 200 வது பதிவுக்கு வாழ்த்துக்கள்.

"இருக்கும் வரை மற்றவர்களுக்கு நம்மால்முடிந்ததை செய்வோம்" என்கின்ற உங்களுடைய உயர்ந்த எண்ணத்திற்க்கு வாழ்த்துகள். மிக தெளிவாய், எளிதாய் தமிழில் எழுதியும், உங்களுக்கு தெரிந்த
விஷயங்களை எங்களுடன் பகிர்ந்து கொண்டு, எங்களை சந்தோஷப்படுத்தும் உங்களுக்கு அந்த இறைவன் என்றும் பலமடங்கு சந்தோஷங்களை வழங்க எல்லாம் வல்ல இறைவனை பிராத்திக்கிறேன்.

நன்றி சார்...

Anonymous சொன்னது…

இனிய பிறந்தநாள் மற்றும் 200 வது பதிவுக்கு வாழ்த்துக்கள்.

அன்புடன் மஜீத்.(முன்னர் வாழ்த்தில் என் பெயர் போடாது விட்டுவிட்டேன்)

sarusriraj சொன்னது…

பிறந்த நாள் வாழ்த்துக்கள்

Mrs.Menagasathia சொன்னது…

பிறந்தநாள் மற்றும் 200 வது பதிவுக்கு வாழ்த்துக்கள்.

Anonymous சொன்னது…

வணக்கம் வேலவன் அவர்களே முதற்கண் உங்களுக்கு எனது பிறந்த நாள் வாழ்த்துக்கள். உங்கள் வலைப்பூவை தவறாமல் பார்வையிடுபவன் நான். மேலும் மேலும் உங்கள் பதிவுகளை நாளும் எதிர்பார்க்கின்றேன். 200ம் கடந்து வளமுடன் வாழ எனது வாழ்த்துக்கள்.
ஜனா

நித்தி சொன்னது…

திரு.வேலன் சாருக்கு வணக்கம்......பிறந்தநாள் வாழ்த்துக்கள்.......

200 வது பதிவிற்க்கும் வாழ்த்துக்கள்............

இந்த பிறந்தநாளும் இந்த‌ 200வது பதிவு இரண்டாயிரமாகி பின் இருபதாயிரமாகி எண்னிக்கையில்லாமல் வந்துகொண்டே இருக்கவேண்டும் அதுவரை வாழ்கையில் எல்லா வளமும் பெற்று வளமோடு வாழ‌ எல்லா வல்ல இறைவனை வேண்டி வணங்குகிறோம்.

என்றும் அன்புடன்,
உங்களின் நண்பர் மற்ரும் சக பதிவர்
நித்தியாநந்தம்
மோகனகிருஷ்ண‌ன்
Administrators
www.pudhuvai.com

mdniyaz சொன்னது…

அன்பு நண்பர் வேலன் அவர்கள்
பல்லாண்டு வாழ இறைவனிடம் பிரர்த்திக்கிறேன், உங்களது பணி என்னென்ரும் தொடர வாழ்த்துகின்றேன்.
அன்புடன்
முஹம்மது நியாஜ்
கோலாலம்பூர்

..:: Mãstän ::.. சொன்னது…

பிறந்தநாள் வாழ்த்துக்கள் வேலன்.

வேலன். சொன்னது…

அன்புடன் அருணா கூறியது...
பூங்கொத்துக்களுடன் 200க்கும் ,பிறந்தநாளுக்கும் வாழ்த்துக்கள்!

பூங்கொத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றி சகோதரி அருணா அவர்களே...
வாழ்க வளமுடன்,
வேலன்.

வேலன். சொன்னது…

Dr.Rudhran கூறியது...
hearty wishes for your happiness. i am one of the many who learn a lot through your blogs. keep writing and grow in happiness//

ரொம்ப நன்றி டாக்டர்...தங்கள் வருகையும் வாழ்த்தும் இன்று எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை தந்தது...
வாழ்க வளமுடன்,
வேலன்.

வேலன். சொன்னது…

♠ ராஜு ♠ கூறியது...
இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் பாஸ்.//

நன்றி ராஜீ அவர்களே...
வாழ்க வளமுடன்,
வேலன்.

வேலன். சொன்னது…

ந.முத்துக்குமார்-சிங்கப்பூர் கூறியது...
அன்புடன் பிறந்த நாள் வணக்கங்கள் வேலன் சார்,

இன்றுபோல் என்றும் எதையும் வென்றும் அன்றும் இன்றும் என்றும் மனதில் மகிழ்ச்வெள்ளம் பொங்கும்
அதி்ல் உங்கள் புகழ் என்றும் ஓங்கும்.....

என்றும் எங்களுக்கு புதுப்புது விஷயங்களை அள்ளித்தந்தும்,
தெளிவாய் மிக எளிதாய் தமிழில் எழுதியும் எங்களை சந்தோஷப்படுத்தும் உங்களுக்கு அந்த இறைவன் இன்றுபோல் என்றும் பலமடங்கு சந்தோஷங்களை வழங்க
வேண்டுமென அவனை வணங்கி
உங்களை வாழ்த்த வயதில்லாவிட்டாலும்
வளர துணைநிற்போம் என்றும் நாங்கள் .........

வாழ்க வளமுடன்
என்றும் நட்புடன்
ந.முத்துக்குமார்//

நன்றி நண்பரே...

//இன்றுபோல் என்றும் எதையும் வென்றும் அன்றும் இன்றும் என்றும் மனதில் மகிழ்ச்வெள்ளம் பொங்கும்
அதி்ல் உங்கள் புகழ் என்றும் ஓங்கும்//
குறிப்பிட்ட வரிகள் எனது குடும்பத்தினர் அனைவரும் ரசித்து படித்தனர்.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சார்.
என்றும் உங்கள் ஆதரவு வேண்டி...
வாழ்க வளமுடன்,
வேலன்.

வேலன். சொன்னது…

கிருஷ்ணா (Krishna) கூறியது...
வாழ்த்துக்கள். அனைத்திற்கும்.
நன்றி//

நன்றி கிருஷ்ணா அவர்களே...
வாழ்க வளமுடன்,
வேலன்.

வேலன். சொன்னது…

யூர்கன் க்ருகியர் கூறியது...
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் சார்.

நன்றி சார்்....
நீண்ட கருத்துரைக்கும் வாழ்த்துக்கும்.

வாழ்க வளமுடன்,
வேலன்.

வேலன். சொன்னது…

ந.முத்துக்குமார்-சிங்கப்பூர் கூறியது...
200வது பதிவிற்கு மனம்கனிந்த வாழ்த்துகள் வேலன் சார்,

இன்றுபோல் என்றும் நன்றாய் நல்ல தமிழில் பதிவிட இருநூறு என்ன இரண்டாயிரத்தையும் எட்டிவிட அதையும் தாண்டி என்றும் இன்னும் நான்றாய் தொடர்ந்திட வாழ்த்துகள்.


வாழ்க வளமுடன்
என்றும் நட்புடன்
ந.முத்துக்குமார்//

எனக்கும் ஆசைதான். ஆனால் ஆண்டவன் அதற்கு மனதுவைக்கவேண்டும்.
தங்கள் வருகைக்கு நன்றி சார்.
என்றும் அன்புடன்,
வேலன்.

வேலன். சொன்னது…

ரஹ்மான் கூறியது...
இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்

200 வது பதிவு இந்த இனிய பிறந்த நாளில் முடித்துள்ளீர்கள். அடுத்த ஆண்டு இதே நாளில் 2000 வது பதிவை நிறைவடைய வாழத்துக்கள்ஃ

நன்றி நண்பர் ரஹ்மான் அவர்களே...
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
வாழ்க வளமுடன்,
வேலன்.

வேலன். சொன்னது…

ரோஸ்விக் கூறியது...
பிறந்தநாள் மற்றும் 200 வது பதிவுக்கு வாழ்த்துக்கள் நண்பரே! டூ இன் ஒன் படமும் அருமை. இளவட்ட ஃபிகரா இருந்தா இன்னும் அருமையாக இருக்கும். :-))

உங்கள் இடுகை வழக்கம்போல் தொழில்நுட்பத்தில் கலக்கல் தான். தொடரட்டும்ஃஃ

நன்றி ரோஸ்விக் அவர்களே..தங்கள் கேட்ட ஆஸ்ரேலியா நண்பர் முகவரி கேட்டுப்பார்க்கின்றேன்.
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே...
வாழ்க வளமுடன்,
வேலன்.

வேலன். சொன்னது…

டவுசர் பாண்டி கூறியது...
உங்க 200 பதிவுக்கும் , அப்பால உங்க பொறந்த நாளுக்கும் வாழ்த்துக்கள் தலீவா !! கலக்குங்க தல


நன்றி நண்பர் டவுசர் பாண்டி அவர்களே...'
வாழ்க வளமுடன்,
வேலன்.

வேலன். சொன்னது…

Uday கூறியது...
happy birthday velan


நன்றி உதய் ...
வாழ்க வளமுடன்,
வேலன்.

வேலன். சொன்னது…

வடிவேலன் ஆர். கூறியது...
தல வாழ்த்துக்கள் தல இன்று போல் தினம் ஒரு பதிவிட்டு பதிவுலகத்தில் நீங்கா இடம் பிடிக்க வாழ்த்துக்கள் 200 ஒரு மைல்கல் கூடிய விரைவில் 2000 ஒரு மைல்கல்லை அடைய வாழ்த்துக்கள்

நன்றி ...நண்பரே...
வாழ்க வளமுடன்,
வேலன்.

வேலன். சொன்னது…

பெயரில்லா கூறியது...
இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்!

மற்றும் 200 வது பதிவுக்கு வாழ்த்துக்கள்!ங்க//

பெயரில்லா கூறியது...
இனிய பிறந்தநாள் மற்றும் 200 வது பதிவுக்கு வாழ்த்துக்கள்.

அன்புடன் மஜீத்.(முன்னர் வாழ்த்தில் என் பெயர் போடாது விட்டுவிட்டேன்)//

இரண்டுமுறை வாழ்த்தியமைக்கு நன்றி
நண்பர் மஜித் அவர்களே...
வாழ்க வளமுடன்,
வேலன்.

வேலன். சொன்னது…

Thomas Ruban கூறியது...
இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் மற்றும் 200 வது பதிவுக்கு வாழ்த்துக்கள்.

"இருக்கும் வரை மற்றவர்களுக்கு நம்மால்முடிந்ததை செய்வோம்" என்கின்ற உங்களுடைய உயர்ந்த எண்ணத்திற்க்கு வாழ்த்துகள். மிக தெளிவாய், எளிதாய் தமிழில் எழுதியும், உங்களுக்கு தெரிந்த
விஷயங்களை எங்களுடன் பகிர்ந்து கொண்டு, எங்களை சந்தோஷப்படுத்தும் உங்களுக்கு அந்த இறைவன் என்றும் பலமடங்கு சந்தோஷங்களை வழங்க எல்லாம் வல்ல இறைவனை பிராத்திக்கிறேன்.

நன்றி சார்.ஃஃ

நன்றி தாமஸ் ரூபன் அவர்களே..
வருகைக்கும கருத்துக்கும் நன்றி

வாழ்க வளமுடன்,
வேலன்.

வேலன். சொன்னது…

sarusriraj கூறியது...
பிறந்த நாள் வாழ்த்துக்கள்

நன்றி நண்பரே...
வாழ்க வளமுடன்,
வேலன்.

வேலன். சொன்னது…

Mrs.Menagasathia கூறியது...
பிறந்தநாள் மற்றும் 200 வது பதிவுக்கு வாழ்த்துக்கள்

நன்றி சகோதரி..உங்கள் சமையல் குறிப்புகள் சூப்பர்...வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரி

வாழ்க வளமுடன்,
வேலன்.

வேலன். சொன்னது…

பெயரில்லா கூறியது...
வணக்கம் வேலவன் அவர்களே முதற்கண் உங்களுக்கு எனது பிறந்த நாள் வாழ்த்துக்கள். உங்கள் வலைப்பூவை தவறாமல் பார்வையிடுபவன் நான். மேலும் மேலும் உங்கள் பதிவுகளை நாளும் எதிர்பார்க்கின்றேன். 200ம் கடந்து வளமுடன் வாழ எனது வாழ்த்துக்கள்.
ஜனா

நன்றி ஜனா அவர்களே...
வருகைக்கும கருத்துக்கும் நன்றி நண்பரே...
வாழ்க வளமுடன்,
வேலன்.

வேலன். சொன்னது…

நித்தியானந்தம் கூறியது...
திரு.வேலன் சாருக்கு வணக்கம்......பிறந்தநாள் வாழ்த்துக்கள்.......

200 வது பதிவிற்க்கும் வாழ்த்துக்கள்............

இந்த பிறந்தநாளும் இந்த‌ 200வது பதிவு இரண்டாயிரமாகி பின் இருபதாயிரமாகி எண்னிக்கையில்லாமல் வந்துகொண்டே இருக்கவேண்டும் அதுவரை வாழ்கையில் எல்லா வளமும் பெற்று வளமோடு வாழ‌ எல்லா வல்ல இறைவனை வேண்டி வணங்குகிறோம்.

என்றும் அன்புடன்,
உங்களின் நண்பர் மற்ரும் சக பதிவர்
நித்தியாநந்தம்
மோகனகிருஷ்ண‌ன்
Administrators
www.pudhuvai.com


நன்றி நண்பர் நித்தியாநந்தம் மற்றும் மோகனகிருஷ்ணன் மற்றும் புதுவை.காம்

வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி நண்பர்களே..
வாழ்க வளமுடன்,
வேலன்.

வேலன். சொன்னது…

mdniyaz கூறியது...
அன்பு நண்பர் வேலன் அவர்கள்
பல்லாண்டு வாழ இறைவனிடம் பிரர்த்திக்கிறேன், உங்களது பணி என்னென்ரும் தொடர வாழ்த்துகின்றேன்.
அன்புடன்
முஹம்மது நியாஜ்
கோலாலம்பூர்ஃஃ

நன்றி நண்பர் முஹம்மது நியாஜ் அவர்களே...
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே...
வாழ்க வளமுடன்,
வேலன்.

வேலன். சொன்னது…

..:: Mãstän ::.. கூறியது...
பிறந்தநாள் வாழ்த்துக்கள் வேலன்ஃஃ

நன்றி நண்பர் மஸ்தான் அவர்களே...
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

வாழ்க வளமுடன்,
வேலன்.

விஜய் சொன்னது…

பிறந்தநாள் நல்வாழ்த்துகள்

ஜெ.ஜெயமார்த்தாண்டன் சொன்னது…

பிறந்த நாள் வாழ்த்துக்கள் வேலன்.

குறை ஒன்றும் இல்லை !!! சொன்னது…

வாழ்க வளமுடன்... நிறைய பேர் முதன் முதலாக வாழ்த்து சொல்லி இருப்பார்கள்.. நான் கொஞ்சம் வித்தியாசமாக ........

LIC SUNDARA MURTHY சொன்னது…

Mr.Velan
Many more happy returns of this day.I wish you and your family members long live with the blessings of all the readers and the Lord venkateswara and wish you have peace of mind enough welath and knowledge God bless you
licsundaramurthy
www.salemscooby.blogspot.com

mohanpuduvai சொன்னது…

Mr. Velan Wish you Happy Birth Day.


From - Mohan from Puducherry.

colvin சொன்னது…

பிறந்தநாள் வாழ்த்துக்கள் நண்பரே!

200 பதிவு அல்ல 2000 பதிவுகள் இட வேண்டும் என்பதே என் பிரார்த்தனை

தமிழுக்கு தமிழருக்கும் நீங்கள் ஆற்றிரும் பங்களிப்பு அளப்பெரியது.

எங்கள் பதிவுகளை இ-மெயில் வாயிலாக படித்து வருகிறேன்.

கடவுள் உங்களை ஆசிர்வதித்து வழிநடத்துவராக


அன்புடன்
கொல்வின்
இலங்கை

இராஜேஷ் சொன்னது…

பிறந்த நாள் வாழ்த்துக்கள் வேலன்,
மற்றும் ஒரு வேண்டுகோள்,தமிழ் எழுத்தை எப்படி வித்தியாசமாக வடிமைப்பது என்று கூறுங்கள்.

வேலன். சொன்னது…

விஜய் கூறியது...
பிறந்தநாள் நல்வாழ்த்துகள்//

நன்றி விஜய் அவர்களே...
வாழ்க வளமுடன்,
வேலன்.

வேலன். சொன்னது…

குறை ஒன்றும் இல்லை !!! கூறியது...
வாழ்க வளமுடன்... நிறைய பேர் முதன் முதலாக வாழ்த்து சொல்லி இருப்பார்கள்.. நான் கொஞ்சம் வித்தியாசமாக


வித்தியாசமாக வாழ்த்தியமைக்கு நன்றி நண்பரே...
வாழ்க வளமுடன்,
வேலன்.

வேலன். சொன்னது…

ஜெ.ஜெயமார்த்தாண்டன் கூறியது...
பிறந்த நாள் வாழ்த்துக்கள் வேலன்.ஃஃ

நன்றி நண்பர் ஜெயமார்த்தாண்டன் அவர்களே...
வாழ்க வளமுடன்,
வேலன்.

யவனராணி சொன்னது…

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் வேலன் சார்

பதிவுகளை விடாமல் தொடருங்க கணக்கில்லாம...

Anonymous சொன்னது…

Happy Birthday to you sir.....

THANGAMANI சொன்னது…

வாழ்க வளமுடன்.......

ஜிஆர்ஜி allways cool சொன்னது…

வணக்கம் திரு. வேலன்... உங்களுக்குப் பிறந்த நாள் என்னுடைய இதயம் வாழ்த்துகின்றது. நெஞ்சார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
ஜிஆர்ஜி
புதுவை.

வேலன். சொன்னது…

LIC SUNDARA MURTHY கூறியது...
Mr.Velan
Many more happy returns of this day.I wish you and your family members long live with the blessings of all the readers and the Lord venkateswara and wish you have peace of mind enough welath and knowledge God bless you
licsundaramurthy
www.salemscooby.blogspot.com//

நன்றி திரு.சுந்தரமூர்த்தி அவர்களே...
தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி...
வாழ்க வளமுடன்,
வேலன்.

வேலன். சொன்னது…

mohanpuduvai கூறியது...
Mr. Velan Wish you Happy Birth Day.


From - Mohan from Puducherry.

நன்றி மோகன் அவர்களே...
வாழ்க வளமுடன்,
வேலன்.

வேலன். சொன்னது…

colvin கூறியது...
பிறந்தநாள் வாழ்த்துக்கள் நண்பரே!

200 பதிவு அல்ல 2000 பதிவுகள் இட வேண்டும் என்பதே என் பிரார்த்தனை

தமிழுக்கு தமிழருக்கும் நீங்கள் ஆற்றிரும் பங்களிப்பு அளப்பெரியது.

எங்கள் பதிவுகளை இ-மெயில் வாயிலாக படித்து வருகிறேன்.

கடவுள் உங்களை ஆசிர்வதித்து வழிநடத்துவராக


அன்புடன்
கொல்வின்
இலங்கைஃஃ

தங்கள் வருகைக்கும் கருததுக்கும் ஆசிர்வாதத்திற்கும் நன்றி நண்பர் கொல்வின் அவர்களே...
வாழ்கவளமுடன்,
வேலன்.

வேலன். சொன்னது…

இராஜேஷ் கூறியது...
பிறந்த நாள் வாழ்த்துக்கள் வேலன்,
மற்றும் ஒரு வேண்டுகோள்,தமிழ் எழுத்தை எப்படி வித்தியாசமாக வடிமைப்பது என்று கூறுங்கள்//

தங்கள் வாழ்த்துக்கு நன்றி இராஜேஷ் அவர்களே...தமிழில் உங்கள் கையேழத்திலேயே பாண்ட் கொண்டுவரலாம். அனைத்துவேலைகளும் முடிந்துவிட்டது. ஒரு சின்னவேலை பாக்கிஉள்ளது. முடிந்ததும் வெளியிடுகின்றேன்.
வாழ்க வளமுடன்,
வேலன்.

வேலன். சொன்னது…

யவனராணி கூறியது...
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் வேலன் சார்

பதிவுகளை விடாமல் தொடருங்க கணக்கில்லாம..ஃஃ

நன்றி சகோதரி...தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி...
வாழ்க வளமுடன்,
வேலன்.

வேலன். சொன்னது…

பெயரில்லா கூறியது...
Happy Birthday to you sir....

நன்றி நண்பரே...
வாழ்க வளமுடன்,
வேலன்.

வேலன். சொன்னது…

THANGAMANI கூறியது...
வாழ்க வளமுடன்......


நன்றி நண்பர் தங்கமணி அவர்களே...
வாழ்க வளமுடன்,
வேலன்.

வேலன். சொன்னது…

ஜிஆர்ஜி allways cool கூறியது...
வணக்கம் திரு. வேலன்... உங்களுக்குப் பிறந்த நாள் என்னுடைய இதயம் வாழ்த்துகின்றது. நெஞ்சார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
ஜிஆர்ஜி
புதுவைஃஃ

நன்றி நண்பர் ஜிஆர்ஜி அவர்களே...
வருகைக்கும் கருத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றி
வாழ்க வளமுடன்,
வேலன்.

கார்த்திக் சொன்னது…

வாழ்துக்கள் தல

அமிர்தவர்ஷினி அம்மா சொன்னது…

belated birthday wishes, your blog is very useful one, esp. i learn lot about photoshop. thank u.

கருத்துரையிடுக

பக்கங்கள்

பிரபலமான இடுகைகள்