போட்டாஷாப்பில் பாடம் போட்டு நிறைய நாட்கள் ஆகி
விட்டதாக கருத்துரையில் நண்பர் கேட்டிருந்தார். நேரம்
குறைவாக இருப்பதே தாமதத்திற்கு காரணம்..இனி
பாடத்திற்கு வருவோம். இன்றைய போட்டோஷாப்பில்
முகப்பரு -தழும்பு - சிறிய வெட்டுக்காயம் ஆகியவற்றை
எப்படி நீக்குவது என காணலாம். முதலில் முகப்பரு உள்ள
புகைப்படத்தை திறந்துகொள்ளுங்கள். (நான் பிரபல
நடிகையின் மேக்கப் போடுவதற்கு முன் உள்ள புகைப்படத்தை
எடுத்துள்ளேன்.நடிகை யார் என்று கண்டுபிடித்து
கருத்துரையில் சொல்லுங்கள் பார்க்கலாம்)
இப்போது 7 ஆவதாக உள்ள டூலை தேர்வு செய்து கொள்ளுங்கள்.
அதில் கர்சரை வைத்ததும் அதில் முதலில் உள்ள Spot Healing
Brush Tool தேர்வு செய்யுங்கள்.

இப்போது புகைப்படத்தில் முகப்பரு உள்ள இடத்தை நான்
சுட்டி காட்டியுள்ளேன். கீழே உள்ள புகைப்படத்தை பாருங்கள்.
இப்போது செல்ட் செய்த டூலை முகத்தில் நன்றாக உள்ள
இடத்தில் வைத்து ஆல்ட் கீயை அழுத்துங்கள். சிறிய வட்டம்
வரும். பின்னர் கர்சரை எடுத்துவந்து முகப்பரு உள்ள
இடத்தில் அழுத்துங்கள். முகப்பரு நொடியில் மறைந்துவிடும்.
(எந்த கீரீமும் போடாமலே உங்களுக்கு முகம் அழகாக மாறி
விட்டதை காணலாம். ) அதுப்போல் முகப்பரு உள்ள
இடங்களில் இதுபோல் செய்யுங்கள். கீழே உள்ள படத்தை
பாருங்கள்.

எப்படி மாறிவிட்டதை பார்த்தீர்களா?.....
சரி இந்த டூல் வேறு எதற்கு பயன் படும். ஓருவர் முகத்தை
மறைக்க இந்த டூலை பயன்படுத்தலாம்.நிறைய பத்திரிக்கை
களில் பார்த்திருப்பீர்கள். முகத்தை மறைத்துள்ள நடிகை யார்
என்று கண்டுபிடியுங்கள் என எழுதியிருப்பார்கள். அவ்வாறு
முகத்தை மறைக்க இந்த டூல் பயன்படும். கீழே உள்ள புகைப்
படத்தை பாருங்கள். நடிகர் Surya மற்றும் Sri Devi உள்ளனர்.

மேலே சொன்னது போல் இந்த டூலைசெலக்ட் செய்தபின் வெற்றிடத்தில
வைத்து ஆல்ட் கீயை கிளிக் செய்து முகத்தின் மீது கர்சரால்
தேயுங்கள். உங்களுக்கு கருப்பு நிறத்துடன் படம் மறைவதை
காணுங்கள். கீழே உள்ள படத்தை பாருங்கள்.
இறுதியாக முகம் அனைத்தும் மறைத்ததும் கர்சரை எடுத்து
விடுங்கள். இப்போது முகம் மறைந்துள்ளதை காணலாம்.
கீழே உள்ள புகைப்படத்தை பாருங்கள்.
பதிவின் நீளம் கருதி பாடத்தை இத்துடன் முடித்துக்கொள்கின்றேன்.
பயன்படுத்திப்பாருங்கள். கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்,
வேலன்.
JUST FOR JOLLY PHOTOS:-
அம்மா...அம்மா என்னை குதிரை சவாரி ஏற்றிக்குனுபோம்மா...
இன்றைய PSD டிசைனுக்கான புகைப்படம் கீழே:-
டிசைன் செய்தபின் வந்த படம் கீழே:-
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்
27 கருத்துகள்:
பதிவுக்கு நன்றிங்க.
தற்செயலாக http://blog.thiratti.com/2009/07/jul-13-19.html இந்த பதிவை பார்த்தேன். மேலும்,மேலும் நீங்கள் புகழ் பெற வாழ்த்துக்கள்.
அன்புடன் மஜீத்.
மிக அருமை
இனிய தமிழர் திருநாள் வாழ்துக்கள்
நல்லாருக்குங்க...
நடிகை போல் தெரியவில்லையே!!
அட்வான்ஸ் பொங்கல் வாழ்த்துக்கள்
மிகவும் அருமை நண்பரே
பொங்கல் வாழ்த்துக்கள்
நண்பரே,
மிகவும் நல்ல தகவல் , ஆனால் pitch tool use செய்தால் நன்றாக இருக்கும் என நினைக்கிறேன்
pls tell me
தலீவா !! இதுக்கு மின்னாளியே இத்தப் பத்தி சொல்டீன்களே பா !! இது இன்னா மறுபடி சொல்லிக்கீறிங்கோ !! ஓஹோ நெரியோ பேருக்கு மறுபடி பரு ( (வளந்துடுதா ? )வந்துடுத்தா ? அப்ப ஓகே .
மிகவும் நுட்பமாக விளக்கியிருக்கிறீர்கள் நண்பரே...
பெயரில்லா கூறியது...
பதிவுக்கு நன்றிங்க//
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே...
உங்கள் பெயரை குறிப்பிடலாமே...
வாழ்க வளமுடன்,
வேலன்.
உலவு.காம் ( புதிய தமிழ் திரட்டி ulavu.com) கூறியது...
மிக அருமை
இனிய தமிழர் திருநாள் வாழ்துக்கள்
தங்கள் வருகைக்கும் ஆதரவுக்கும் வாழ்த்துக்கும் நன்றி
வாழ்க வளமுடன்,
வேலன்.
பெயரில்லா கூறியது...
தற்செயலாக http://blog.thiratti.com/2009/07/jul-13-19.html இந்த பதிவை பார்த்தேன். மேலும்,மேலும் நீங்கள் புகழ் பெற வாழ்த்துக்கள்.
அன்புடன் மஜீத்ஃஃ
நன்றி நண்பரே...தங்களுக்கு மெயில் அனுப்பிஉள்ளேன்.பார்க்கவும்.
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
வாழ்க வளமுடன்,
வேலன்.
jailani கூறியது...
நடிகை போல் தெரியவில்லையே!ஃ
ஆம் மேக்கப்போடமல் இருக்கும் புகைப்படம்..மேக்கப் போட்டால்தான் நடிகையாக தெரிவார்...
வாழ்க வளமுடன்,
வேலன்.
அண்ணாமலையான் கூறியது...
நல்லாருக்குங்க.ஃஃ
நன்றி அண்ணாமலை சார்...
வாழ்க வளமுடன்,
வேலன்.
ரமேஷ் கூறியது...
மிகவும் அருமை நண்பரே
பொங்கல் வாழ்த்துக்கள்//
நன்றி ரமேஷ் சார் ...
வாழ்க வளமுடன்,
வேலன்.
jailani கூறியது...
அட்வான்ஸ் பொங்கல் வாழ்த்துக்கள்ஃஃ
வாழ்த்துக்கு நன்றி நண்பரே...
வாழ்க வளமுடன்,
வேலன்.
entertainments கூறியது...
நண்பரே,
மிகவும் நல்ல தகவல் , ஆனால் pitch tool use செய்தால் நன்றாக இருக்கும் என நினைக்கிறேன்
pls tell meஃஃ
நண்பருக்கு...டூல்கள் வரிசையில் வந்துகொண்டு இருக்கின்றேன். இதைவிட சூப்பர் டூல்களும் உள்ளது. தொடர்ந்த பாடங்களில் அவை தெரியவரும். இந்த டூலையும் அறிந்துகொள்ளவே இதை பதிவிட்டுள்ளேன்.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
நண்பரே...
வாழ்க வளமுடன்,
வேலன்.
முனைவர்.இரா.குணசீலன் கூறியது...
மிகவும் நுட்பமாக விளக்கியிருக்கிறீர்கள் நண்பரே.ஃஃ
நன்றி நண்பரே...
வாழ்க வளமுடன்,
வேலன்.
டவுசர் பாண்டி கூறியது...
தலீவா !! இதுக்கு மின்னாளியே இத்தப் பத்தி சொல்டீன்களே பா !! இது இன்னா மறுபடி சொல்லிக்கீறிங்கோ !! ஓஹோ நெரியோ பேருக்கு மறுபடி பரு ( (வளந்துடுதா ? )வந்துடுத்தா ? அப்ப ஓகே .ஃஃ
உன் ஞாபகசக்தி சோக்காகீதுபா...ஆனா அது இது இல்லை..அது எக்ஸ்ட்ரா பிட்டிங் மாதிரி அது எக்ஸ்ட்ரா முகத்தை பாலிஷ் பண்றது. இது போட்டோஷாப்பிலே இருக்கின்ற டூல்...சரியா...
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
வாழ்க வளமுடன்,
வேலன்.
பிளாக் எழுதுபவர்களுக்கு ரடான் மீடியா ஒர்க்ஸ் நிறுவனத்தின் பல்வேறு வாய்ப்புக்கள்...
எங்கள் வலைத்தளத்தில் உங்கள் பதிவுகளை பகிர்ந்து கொள்ளுங்கள்...
www.radaan.tv
http://radaan.tv/Creative/DisplayCreativeCorner.aspx
கிருது கூறியது...
nice article//
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே...
வாழ்க வளமுடன்,
வேலன்.
RADAAN கூறியது...
பிளாக் எழுதுபவர்களுக்கு ரடான் மீடியா ஒர்க்ஸ் நிறுவனத்தின் பல்வேறு வாய்ப்புக்கள்...
எங்கள் வலைத்தளத்தில் உங்கள் பதிவுகளை பகிர்ந்து கொள்ளுங்கள்...
www.radaan.tv
http://radaan.tv/Creative/DisplayCreativeCorner.aspx//
சின்னத்திரையில் பல வெற்றிகளை குவித்த தாங்கள் வலைத்தள உலகிலும் பல வெற்றிகளை தொடர வாழ்த்துக்கள். தொடருங்கள்....தொடர்கின்றோம்.
வாழ்க வளமுடன்,
வேலன்.
Where is the answer?
Dear Velan,
I can not download the desktop calender. how can i go and choose the right option. plz kindly explain clearly. with luv feroz, you can send mail directly to ferozhkhan09@gmail.com. thanks
தங்கள் படைப்புகள் அனைத்தும் அருமை
என்னுடைய சந்தேகத்திற்கு விடை அளியுங்கள்
gmail id ஐ எப்படி நீக்குவது?
தங்கள்
kalaivani
வேலன் சார் என் பதிவு பக்கம் வந்தது ரொம்ப சந்தோஷம்.
உங்கள் அனைத்து பதிவும் மிகவும் பயனுள்ள பதிவு. வாழ்த்துக்கள்
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.
கருத்துரையிடுக