வேலன்:-போட்டோஷாப் பாடம்-28 Polygonal Lasso Tool



போட்டாஷாப்பில் சென்ற பதிவில் Lasso Tool
பற்றி பார்த்தோம். இன்று Polygonal Lasso Tool பற்றி
பார்க்கலாம். இது மூன்றாவதாக உள்ள Lasso Tool-ல்
உள்ள உப டூல்ஆகும். Lasso Tool மூலம் படத்தை
சுற்றி மொத்தமாக தேர்வு செய்தால் இந்த
Polygonal Lasso Tool மூலம் ஒரு படத்தில் உள்ள
வளைந்துள்ள படத்தையே தேர்வு செய்யலாம்.
ஒரு கார் படம் இருக்கின்றது. அந்த காரை மட்டும்
தேர்வு செய்யவேண்டும். இந்த டூல் உபயோகப்படும்.
சரி இப்போது கீழே உள்ள படத்தை பாருங்கள்.

[7.jpg]

இப்போது Polygonal Lasso Tool தேர்வு செய்து கொள்ளுங்கள்.
இப்போது நான் கீழே உள்ள படத்தை தேர்வு செய்துள்ளேன்.


இப்போது இந்த பட்டாம்பூச்சியை தேர்வு செய்ய வேண்டும்.
இந்த டூல் மூலம் பட்டாம்பூச்சியை கட் செய்யுங்கள்.


ரைட் . இப்போது பட்டாம் பூச்சி நடுவில் வைத்து ரைட் கிளிக்
செய்யுங்கள். இப்போது உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ
ஓப்பன் ஆகும். அதில் உள்ள Select Inverse கிளிக் செய்யுங்கள்.
கீழே உள்ள படத்தை பாருங்கள்.

இப்போது படத்தை பாருங்கள். படத்தை சுற்றி உள்ள
இடங்களில் தேர்வு செய்துள்ளதை பாருங்கள்.


இப்போது டெலிட் கீ யை அழுத்துங்கள்.இப்போது உங்கள்
Backround Color -நடுவில் படம் தேர்வாகிஉள்ளதை பாருங்கள்.
கீழே உள்ள படத்தை பாருங்கள். பட்டாம் பூச்சி மட்டும்
தனியாக தேர்வாகிஉள்ளது. இதை வேண்டிய இடத்தில்
நாம் பொருத்திக்கொள்ளலாம்.


பதிவின் நீளம் கருதி இத்துடன் முடித்துக்கொள்கின்றேன்.
பதிவினை பாருங்கள். இரண்டு மூன்று முறை முயற்சி
செய்யுங்கள். சரியாக வரும்.

வாழ்க வளமுடன்,

வேலன்.






JUST FOR JOLLY PHOTOES:-


டேய் ...புடிடா...புடிடா...விட்டுவிடபோறே....


இன்றைய PSD புகைப்படம் கீழே:-



டிசைன் செய்தபின் வந்த படம் கீழே:-


இந்த படத்தை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.


போட்டோஷாப்பில் POLYGONAL LASSO TOOL பற்றி
இதுவரை அறிந்துகொண்டவர்கள்:-
web counter
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

15 கருத்துகள்:

ந.முத்துக்குமார்-சிங்கப்பூர் சொன்னது…

Dear Velan Sir,

Nice lesson, Good tool.

Just for jolly so cute.

Best wishes
Muthu Kumar.N

ஷிர்டி.சாய்தாசன் சொன்னது…

i have plans to start a series on gimp. it will be better if you do that. since photoshop is not free but gimp is free.

ஷிர்டி.சாய்தாசன் சொன்னது…

you write well about photoshop. put a announcement on top right of your blog inviting publishers to make a book on photoshop if you have not already published as a book.
turn your posts into money.

ஷிர்டி.சாய்தாசன் சொன்னது…

it seems you are not mixing english lessons in your blog now. it is good because your ranking will not be disputed. Thanks for complying voluntarily with the request.

ஷிர்டி.சாய்தாசன் சொன்னது…

எவன்டா அது தமிழ்மணத்தில் Thums down ஓட்டு போட்டது? உன்னாலே எழுத வக்கு இல்லே. நல்லா எழுதுறவங்களை ஏன் இம்சை படுத்துறே.

டவுசர் பாண்டி சொன்னது…

இப்படி தனித் தனியாக போடுவதால் , தொடர்வதற்கு சிரமமாக உள்ளது , தனியாக ஒரு வலைத்தளம் அமைத்து அதில் தொடர்ந்து பதிவிட்டால் மிக சிறப்பாக இருக்கும் , தொடருங்கள் ......

mdniyaz சொன்னது…

திரு வேலன் அவர்களுக்கு
உங்களது அனைத்து பாடங்களையும் படித்து வருகின்றேன். மிக்க நன்றி.
இலவசமாக அனிமேசன் சாப்வேர் ஏதாவது இருப்பின் குறிப்பிடுங்கள்.
முக்கியமாக நமக்கு தேவைப்படும் படங்களை அனிமேசன் செய்யவேண்டும்.
மிக்க நன்றி
அன்புடன்
முஹம்மது நியாஜ்,கோலாலம்பூர்

வேலன். சொன்னது…

ந.முத்துக்குமார்-சிங்கப்பூர் கூறியது...
Dear Velan Sir,

Nice lesson, Good tool.

Just for jolly so cute.

Best wishes
Muthu Kumar.N//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சார்...
வாழ்க வளமுடன்,
என்றும் அன்புடன்,
வேலன்.

velan சொன்னது…

shirdi.saidasan@gmail.com கூறியது...
//i have plans to start a series on gimp. it will be better if you do that. since photoshop is not free but gimp is free you write well about photoshop. put a announcement on top right of your blog inviting publishers to make a book on photoshop if you have not already published as a book.
turn your posts into money.
it seems you are not mixing english lessons in your blog now. it is good because your ranking will not be disputed. Thanks for complying voluntarily with the request.//
நீண்ட கடிதத்திற்கு நன்றி நண்பரே..
போட்டோஷாப் அதிகம் விரும்புவதால் அதை பதிவிட்டேன்.புத்தகம் வெளியிட பதிப்பகத்தார் விரும்பினால் வெளியிட தயார்.ஆங்கில பாடங்கள் பாதியிலே நிறுத்திவிட்டேன்.தங்கள் ஆலோசனைக்கு மிக்க நன்றி நண்பரே...


//எவன்டா அது தமிழ்மணத்தில் Thums down ஓட்டு போட்டது? உன்னாலே எழுத வக்கு இல்லே. நல்லா எழுதுறவங்களை ஏன் இம்சை படுத்துறே//

நாம் நமது கடமையை செய்வோம். போற்றுவோர் போற்றட்டும்...தூற்றுவோர் தூற்றட்டும்...அதற்கெல்லாம் கவலைப்படவில்லை.

தங்கள் வருகைக்கும் நீண்ட கருத்துக்கும் மீண்டும் நன்றியை தெரிவித்துக்கொள்கின்றேன்.

வாழ்க வளமுடன்.
வேலன்.

velan சொன்னது…

டவுசர் பாண்டி கூறியது...
இப்படி தனித் தனியாக போடுவதால் , தொடர்வதற்கு சிரமமாக உள்ளது , தனியாக ஒரு வலைத்தளம் அமைத்து அதில் தொடர்ந்து பதிவிட்டால் மிக சிறப்பாக இருக்கும் , தொடருங்கள் .....//

வா வாத்தியாரே...எங்க உன்னை நம்ம பேட்டை பக்கமே காணோம்....சரி சரி வந்ததுக்கு ரொம்ப தாங்ஸ்ப்பா...

வாழ்க வளமுடன்,
வேலன்.

velan சொன்னது…

mdniyaz கூறியது...
திரு வேலன் அவர்களுக்கு
உங்களது அனைத்து பாடங்களையும் படித்து வருகின்றேன். மிக்க நன்றி.
இலவசமாக அனிமேசன் சாப்வேர் ஏதாவது இருப்பின் குறிப்பிடுங்கள்.
முக்கியமாக நமக்கு தேவைப்படும் படங்களை அனிமேசன் செய்யவேண்டும்.
மிக்க நன்றி
அன்புடன்
முஹம்மது நியாஜ்,கோலாலம்பூர்//

நண்பருக்கு இல்லாததா...விரைவில் வெளியிடுகின்றேன் நண்பரே்...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி....

வாழ்க வளமுடன்,
வேலன்.

ஷிர்டி.சாய்தாசன் சொன்னது…

//ஆங்கில பாடங்கள் பாதியிலே நிறுத்திவிட்டேன்//

நிறுத்த சொல்லவில்லை. வேறு புது பிளாகில் அதை மூவ் செய்து தொடருங்கள். மிக்ஸ் செய்ய வேண்டாம் என்றுதான் சொன்னேன்.

Malu சொன்னது…

sorry for the delay. Good lesson.

வேலன். சொன்னது…

Malu கூறியது...
sorry for the delay. Good lessonஃஃ

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரி..
வாழ்க வளமுடன்,
வேலன்.

வேலன். சொன்னது…

shirdi.saidasan@gmail.com கூறியது...
//ஆங்கில பாடங்கள் பாதியிலே நிறுத்திவிட்டேன்//

நிறுத்த சொல்லவில்லை. வேறு புது பிளாகில் அதை மூவ் செய்து தொடருங்கள். மிக்ஸ் செய்ய வேண்டாம் என்றுதான் சொன்னேன்.ஃஃ

விரைவில் ஆரம்பிக்கின்றேன் நண்பரே..
வாழ்க வளமுடன்,
வேலன்.

கருத்துரையிடுக

பக்கங்கள்

பிரபலமான இடுகைகள்