
போட்டோஷாப்பில் இது வரை மார்க்யு டூல்
பற்றிஒன்பது பாடங்களும்,சென்ற பாடத்தில்
Image மற்றும் Duplicate பற்றி பார்த்தோம்.
இதுவரை பாடங்கள் படிக்காதவர்கள்
இங்கு சென்று பாடங்கள் பார்த்துக்
கொள்ளவும்.
பாடம்-1 (07.03.2009) (30)
பாடம்-5 (03.04.2009) (16)




பாடம்-8 (13.05.2009) (14)
பாடம்-10(04.06.2009) (10)
சென்ற பாடத்தில் Image-ல்
போட்டோவின் நகல் எடுப்பது மற்றும்
அதன் அளவு மற்றும் ரெசுலேசன்
மாற்றுதல் பற்றி பார்த்தோம் அல்லவா..
இன்று மார்க்யு டூல் அடுத்துள்ள
மூவ் டூல் பற்றி பார்க்கலாம்.
உங்கள் போட்டோஷாப் திறந்து
கொள்ளுங்கள். அதில் மார்க்யு டூல்
அடுத்துள்ளது தான் மூவ் டூல்.
கீழே உள்ள படத்தில் பாருங்கள் தெரியும்.

சரி. இதன் மூலம் என்ன செய்யலாம்.
ஒரு படத்தை வெட்டியபின் சுலபமாக
நமக்கு வேண்டிய இடத்தில் நகர்த்தி
கொள்ளலாம்.
முதலில் நீங்கள் விரும்பிய படத்தை
போட்டோஷாப்பில் கொண்டு வாருங்கள்.
நான் இந்த குரங்கு படத்தை கொண்டு
வந்துள்ளேன்.

இப்போது இந்த படத்தின் அளவுகளை குறித்து
கொள்ளுங்கள். (இந்த அளவுகளை குறிப்பது
பற்றி சென்ற பாடத்தில் சொல்லியுள்ளேன்.)
பைல் மெனு சென்று புதிய பைல் ஒன்று
ஓப்பன்செய்து அதில் நீங்கள் குறித்துள்ள
அளவுகளை நிரப்பி ஓகே கொடுங்கள்.
உங்களுக்கு இந்த படம் உள்ள அளவுக்கு
வெள்ளைநிற விண்டோ ஓப்பன் ஆகும்.
இனி இந்த படத்தை பாருங்கள்.
இதில் உள்ள குரங்கில் முதல் குரங்கின்
தலையை மார்க்யு டூலால் தேர்வு
செய்துஉள்ளேன்.

இப்போது நீங்கள்கர்சரை மூவ் டூல் சென்று கிளிக்
செய்தபின் மீண்டும் படத்தில் நீங்கள்
தேர்வு செய்த இடத்திற்கு வந்தால் உங்கள்
கர்சர் ஆனது கத்திரிக்கோலாக மாறிவிடும்.
அதை அப்படியே இழுத்துக்கொண்டு
வந்தால் படம் ஆனது கீழே உள்ளவாறு
உங்கள் கர்சருடன் நகர்ந்து வரும்.

அதை அப்படியே இழுத்து வந்து புதிய
விண்டோவில் விட்டு விடவும்.
இதைப்போல் நீங்கள் அடுத்தடுத்த
படங்களையும் தேர்வு செய்யுங்கள்.

மூன்றாவது குரங்குபடத்தையும் தேர்வு
செய்துள்ளேன்.

அவைகளை புதிய விண்டோவில் இந்த
மாதிரி பொருத்தியுள்ளேன்.

இதைப்போலவே நான் மார்க்யு டூலில்
நீள்வட்ட டூலில் குரங்குகளை தேர்வு
செய்துள்ளேன் .





இந்த டூலில் இன்னும் ஒரு வசதி என்ன
வென்றால் ஒரே படத்தை நிறையமுறை
காப்பி செய்யலாம். கீழே உள்ள படத்தை
பாருங்கள்.

மார்யு டூல் மற்றும் மூவ் டூல்கொண்டு ஒட்ட
வைத்தபடம்.

உற்றுப்பார்த்தால் ஒட்டவைத்தது தெரியும்.
ஆனால் கீழ்உள்ள படத்தை பாருங்கள்.

புல்வெளியில் எடுக்கப்பட்ட படம்.
இதில் மார்க்யு டூலால் தேர்வு செய்யவும்.

இதில் போட்டோவை இணைத்துள்ளேன்.
ஒட்டவைத்தது நன்றாக பார்த்தால்தான்
தெரியும்.

மார்க்யு டூல் மற்றும் மூவ் டூலால் நாம்
சதுரமாகவோ - செவ்வகமாகவோ -
நீள் வட்டமாகவோ - வட்டமாகவோ தான்
படத்தை கட் செய்ய முடியும். ஆனால்
பென் டூலால் உருவத்தைமட்டும்
கட் செய்யலாம். பென் டூலால் எப்படி
படத்தை கட் செய்வது என அடுத்த
பாடத்தில் பார்க்கலாம். பதிவின் நீளம்
கருதி பாடத்தை இத்துடன் முடிக்கின்றேன்.
பாடங்களை பாருங்கள். முயற்சி செய்து
பாருங்கள்.
பிடித்திருந்தால் ஒட்டுப்பொடுங்கள்.
வாழ்க வளமுடன்,
வேலன்.
JUST FOR JOLLY PHOTOES


போட்டோஷாப் பாடம் 11 இதுவரை
8 கருத்துகள்:
வேலன் சார்,
நன்கு புரியும்படி எழுதி உள்ளீர் .
மிக்க நன்றி
யூர்கன் க்ருகியர்..... கூறியது...
வேலன் சார்,
நன்கு புரியும்படி எழுதி உள்ளீர் .
மிக்க நன்றி//
நன்றி நண்பரே...
வாழ்க வளமுடன்,
வேலன்.
வேலன்,
அருமையான பதிவு, அதைவிட அருமையாக இருந்தது JUST FOR JOLLY PHOTOES
வாழ்க வளமுடன்
என்றும் நட்புடன்
ந.முத்துக்குமார்
Write more and continuously!
ந.முத்துக்குமார்-சிங்கப்பூர் கூறியது...
வேலன்,
அருமையான பதிவு, அதைவிட அருமையாக இருந்தது JUST FOR JOLLY PHOTOES
வாழ்க வளமுடன்
என்றும் நட்புடன்
ந.முத்துக்குமார்//
நன்றி நண்பரே...
வாழ்க வளமுடன்,
என்றும் அன்புடன்,
வேலன்.
r.selvakkumar கூறியது...
Write more and continuously!//
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே...
வாழ்க வளமுடன்,
வேலன்.
இங்கயும் வந்துட்டோமில்ல!
CAN YOU GIVE SOME TIPS FOR WEBSITE DEVELOPING
-HAJA
கருத்துரையிடுக