வேலன்:-போட்டோஷாப் -குளோன் ஸ்டாம்ப் டூல் -தொடர்ச்சி.

போட்டோஷாப்பில் சென்ற பதிவில் Clone Stamp Tool பற்றி பார்த்தோம். இந்த பதிவிலும் அதன் தொடர்ச்சியை பார்க்கலாம்.இந்த பதிவு மொத்தம் செய்முறை பயிற்சியே...சென்ற பதிவை பார்க்காமல் விட்டவர்கள் இங்கு கிளிக் செய்து பார்த்துக்கொள்ளவும். சாதாரணமாக முகத்தில் மேடு பள்ளங்கள் ஏற்படுவது சகஜமே...இந்த படத்திலும் உள்ள சிறு பள்ளத்தை எப்படி நீ்க்குவது என்று பார்க்கலாம்.
 குளோன் ஸ்டாம்ப் டூல் ஐ முதலில் தேர்வு செய்து பின்னர் முகத்திலேயே நன்றாக உள்ள இடத்தில்  தேர்வு செய்து Alt Key யை அழுத்திய பின்னர் பாதிக்கப்பட்ட இடத்தில் வைத்து கர்சரை அழுத்தியவாறு மெதுவாக தேய்க்கவும். பள்ளம் மறைவதை காணலாம்.கீழே உள்ள படத்தை பாருங்கள். 
ரோஜா செடியில் இரண்டு பூக்கள் மலர்ந்துள்ளதை கீழே பார்க்கலாம்.

அதே பூக்களை செடிநிறைய பூத்துள்ளதாக மாற்றி அமைக்கலாம். கீழே உள்ள படத்தை பாருங்கள்.
நான் பிடித்த முயலுக்கு மூன்று கால் என்பார்கள். இங்கு பாருங்கள். நான் படம்பிடித்த குரங்குக்கு ஐந்து கால்கள் உள்ளது.
உண்மையில் அதற்கு நான்கு கால்கள் தான். போட்டோஷாப் உதவியில் அதற்கு எக்ஸ்ட்ரா ஒரு கால் வரைந்துள்ளேன்.அதன் ஒரிஜினல் புகைப்படம் கீழே:-(அடையாளம தெரியாமல் இருப்பதற்காக அது முகத்தை திருப்பிகொண்டுள்ளது)
கீழே உள்ள சிறுமியின் புகைப்படம் பாருங்கள்.
சிறுவனின் புகைப்படத்தையும் பாருங்கள்.:-
இரண்டுபேரின் முகத்தையும் ஒன்றாக ஆக்கியதால் வந்த புகைப்படம் கீழே:-
குளோனிங் மூலம் புதிய முகம் கிடைத்ததா..? இதுபோல் உங்கள் கற்பனையை உபயோகித்து என்ன வேண்டுமானாலும் செய்து பாருங்கள். பதிவின் நீளம் கருதி இத்துடன முடித்துக்கொள்கின்றேன்.
வாழ்க வளமுடன்.
வேலன்.
JUST FOR JOLLY PHOTOS:-
சீக்கிரம் பறந்து வா...கொஞ்ச தூரத்தில் அமெரிக்காவில் உள்ள அக்கா வீடு வந்துவிடும்.நமக்கு தேவையான உதவியை அக்கா செய்வார்கள்....
இன்றைய PSD டிசைன்புகைப்படம் கீழே:-
டிசைன் செய்தபின் வந்த புகைப்படம் கீழே:-
இதனை பதிவிறக்க இங்கு கிளிக் செய்யவும்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

வேலன்:-போட்டோஷாப் Clone Stamp Tool -ஐ பயன்படுத்த

போட்டோஷாப்பில் இன்று ஓன்பதாக உள்ள Clone Stamp Tool பற்றி பார்க்கலாம். இது ஒரு புகைப்படத்தில் ஒன்றுடன ஓன்று சேர்ப்பதற்கும் புதிய உருவத்தை உருவாக்குவதற்கும் இருக்கும் உருவத்தை இல்லாமல் செய்வதற்கும் பயன்படும். ஆக்கும் தொழிலையும் அழிக்கும் வேலையையும் அடையாளம் தெரியாமல் செய்யும் டூல் இது.நீங்கள் ஏதாவது ஒரு புகைப்படத்தை தேர்வு செய்து கொள்ளுங்கள்.பின்னர் டூல்கள் வரிசையில் ஒன்பதாக உள்ள இந்த டூலை தேர்வு செய்துகொள்ளுங்கள். இப்போது மேலே உங்களுக்கு பிரஷ் மெனு வரும் இதில் தேவையான அளவிற்கு பிரஷ் சைஸ் வைத்துக்கொள்ளுங்கள்.கீழே உள்ள படத்தை பாருங்கள்.
 அழகிய பார்க்கில் பெஞ்ச் ஒன்று உள்ளது. இப்போது இந்த பெஞ்ச் நமக்கு தேவையில்லையென்றால் சுலபமாக எடுத்து விடலாம். இப்போது நீங்கள் Clone Stamp Tool தேர்வு செய்துஉள்ளீர்கள் அல்லவா...கர்சரை இப்போது படத்திற்கு நடுவில் தரையில் கொண்டுவாருங்கள். உங்கள் கர்சரானது சிறிய வட்டத்துடன் உள்ளதா..இப்போழுது தேவையான இடத்தில் கர்சரை வைத்து Alt கீ யை அழுத்துங்கள். உங்கள் கர்சரின் வட்டமானது பெருக்கல் குறியுடன் வரும் .கர்சரை ஒரு கிளிக் செய்யுங்கள். இப்போழுது பெஞ்ச அருகே கர்சரை கொண்டு வாருங்கள். மெதுவாக பெஞ்ச மீது தேயுங்கள். பெஞ்ச் மறைந்து அந்த இடத்தில் உங்களுக்கு இலைகள் வருவதை காணலாம்.பெஞ்ச் அறிகுறியே இல்லாமல் செய்துவிடுங்கள்.கீழே உள்ள புகைப்படத்தை பாருஙகள்.
பெஞ்ச் இருந்த இடம் தெரியாமல் காலி செய்துவிட்டோமா..இப்போது அதைப்போல் உருவம் உருவாக்குவதை காணலாம். கீழே உள்ள படத்தை பாருங்கள்.
இப்போது இதைப்போல இன்னும் ஒரு பிம்பம் கொண்டுவர முன்பு சொன்னதுபோல் கர்சரால் உருவத்தின் ஏதாவது ஒரு இடத்தை தேர்வு செய்யுங்கள்.வேண்டிய இடத்தில் வைத்து கர்சரை கிளிக் செய்தவாறே படத்தில் தேயுங்கள்.படம் அழகாக வரும்.கீழே உள்ள படத்தை பாருங்கள்.
இதைப்போலவே ஒரு படத்தினுள் மற்றும் ஒரு படத்தையும் கொண்டுவரலாம். கீழே உள்ள படத்தை பாருங்கள்.
மிஸ்டர் பீன் படத்தை இதுபோல மாற்றிஉள்ளார்கள். நான் கூடுதல் எபெக்ட்டாக அவருக்கு நெற்றிக்கண் பொருத்தியுள்ளேன்.படத்தினை பாருங்கள்.
இந்த டூல் மூலம் வேறு என்னவெல்லாம் செய்யலாம் என அடுத்த பதிவில் காணலாம். பதிவின் நீளம் கருதி இத்துடன் முடித்துக்கொள்கின்றேன்.
அடுத்த பதிவு தமிழ் புத்தாண்டு அன்று. அன்று உங்களுக்கு ஒர் இன்ப அதிர்ச்சி இருக்கின்றது. புத்தாண்டு அன்று சந்திப்போம்.
வாழ்க வளமுடன்,
வேலன்.
JUST FOR JOLLY PHOTOS:-
ம்...கல்யாணத்திற்கு முன்னர்தான் நீ..பாதி நான் பாதி டைலாக் எல்லாம்.இப்போது எல்லாம் எனக்கு உணவை நீ கொடுக்கறதே இல்லை...
இன்றைய PSD புகைப்படம் கீ்ழே:-
Design செய்த பின் வந்த புகைப்படம் கீழே:-
இதனை பதிவிறக் க இங்கு கிளிக் செய்யவும். பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

பக்கங்கள்

பிரபலமான இடுகைகள்