வேலன்:-போட்டோஷாப் பிரஷ் டூலை இணைப்பது எப்படி?

சில வருடங்களுக்கு முன் சன்டிவியில் பிரபலமான ஒரு வசனம்:- இந்த வாரம் .......என்று பிரபலமானவர்களின் படங்களை போடுவார்கள். அதைப்போல் 
இந்த வாரம் போட்டோ ஷாப் வாரம்.போட்டோக்கள் வைத்து வெவ்வேறு சாப்ட்வேர்கள் மூலம் என்னவெல்லாம் செய்யலாம் என பார்க்கலாம். அதற்கு முன் போட்டோஷாப் பாடத்தை படித்துவிடலாம். 
போட்டோஷாப் பாடத்தில் பிரஷ் டூல் பற்றி பார்த்து வருகின்றோம். இன்றைய பாடத்தில் பிரஷ் டூலை எப்படி இணைத்து பயன்படுத்துவது என்று பார்க்கலாம். உங்களுக்காக இன்று இரண்டு பிரஷ் டூல்களை இணைத்துள்ளேன். 
முதல் பட்டாம்பூச்சி பிரஷ் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யவும்.
இரண்டாம் பட்டாம்பூச்சி பிரஷ் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யவும். இதனை பதிவிறக்கி உங்கள் கணிணியில் ஏதாவது ஒரு டிரைவில் வைத்துக்கொள்ளவும். பின்னர் போட்டோஷாப் பை திறந்து அதில் புதிய பைலை திறக்கவும். இப்போது பிரஷ் டூலை கிளிக் செய்யவும். (முந்தைய பாடம் தெரியாதவர்கள் இங்கு கிளிக் செய்து பாரத்துக்கொள்ளவும்.)
இப்போது உங்களுக்கு மேல்புறம் பிரஷ் தெரியும் . அதில் உள்ள சின்ன அம்புக்குறியை கிளிக் செய்யவும். உங்களுக்கு சின்ன விண்டோ ஒப்பன் ஆகும். அதில் உள்ள சின்ன அம்புக்குறியை கிளிக் செய்யவும். உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஒப்பன ஆகும். 


அதில் உள்ள Load Brushes என்பதனை கிளிக் செய்யவும. நீங்கள் டவுண்லோடு செய்த பிரஷ்ஷை தேர்வு செய்யவும்.இப்போது நீங்கள் டவுண்லோடு செய்த  பட்டர்பிளை பிரஷ் டூலானது இதில் வந்து அமர்ந்திருப்பதை காணலாம்.

இதில் மொத்தம் 30 பட்டர்பிளை மாடல்கள் உள்ளது. இதில் தேவையானதை தேர்வு செய்யவும்.இதில் உள்ள Master Diameter அளவினை மாற்றுவது மூலம் உங்கள் படத்தின அளவை வைத்துக்கொள்ளலாம். அதைப்போல் Foreground Color மாற்றுவது மூலம் வேண்டிய நிறங்களை கொண்டுவரலாம்.கீழே விதவிதமான பட்டாம் பூச்சிகள் பறப்பதை காணுங்கள்.

சாதாரண புகைப்படம் கீழே:-

அதில் பட்டாம் பூச்சி பறக்கவைப்பதை காணுங்கள்.
உதாரணத்திற்கு மற்றும் ஓரு படம் :-
உங்களுக்கு நிறைய பிரஷ் டூல்கள் இணையத்தில் உள்ளன. என்னிடமும் உள்ளது. தேவைப்பட்டால் சொல்லுங்கள்.4 Shared -ல் பதிவேற்றி லிங்க் தருகின்றேன்.போட்டோஷாப்பில் கற்பனை திறன் தான் அதிகம் தேவை.வேண்டிய பிரஷ் டூலை பயன் படுத்தி வேண்டிய டிசைன் கொண்டுவரலாம்.பதிவின் நீளம் கருதி இத்துடன் முடித்துக்கொள்கின்றேன்.சந்தேகம் இருப்பின் கேளுங்கள்.
வாழ்க வளமுடன்,
வேலன்.


JUST FOR JOLLY PHOTOS:-
எப்படி....சூப்பராக லேண்ட் ஆகிறோமா..?
இன்றைய் PSD புகைப்படம் கீழே:-
டிசைன் செய்தபின் வந்தபுகைப்படம் கீழே:-
இதனை பதிவிறக்க இங்கு கிளிக் செய்யவும். பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

வேலன்:-போட்டோஷாப் பிரஷ் டூலில் நமது புகைப்படம் -கையெழுத்து கொண்டுவர

சென்ற போட்டோஷாப் பதிவில் பிரஷ் டூலில் நமது பெயர் கொண்டுவருவது பற்றிப்பார்த்தோம்.அந்த பதிவினை காணதவர்கள் இங்கு கிளிக் செய்து பார்த்துவிட்டு வரவும்.இன்றைய பதிவில் போட்டோஷாப் பிரஷ் டூலில் நாம் நமது புகைப்படங்களையும் நமது கையெழுத்தையும் எப்படி கொண்டுவருவது என்று பார்க்கலாம்.
முதலில் பிரஷ் டூலாக வைத்துக்கொள்ளவிரும்பும் புகைப்படத்தை திறந்து கொள்ளுங்கள்.கீழே நான் எனது மகனின் புகைப்படத்தை தேர்வு செய்துள்ளேன்.
இப்போது போட்டோஷாப்பில் எடிட் மெனுவினை கிளிக்செய்யுங்கள். உங்களுக்கு வரும் விண்டோவில் Define Brush Preset  என்பதனை கிளிக் செய்யுங்கள். கீழே உள்ள விண்டோவினை பாருங்கள்.
இப்போது உங்களுக்கு கீழ்கணட விண்டோ ஒப்பன் ஆகும். அதில் ஓ.கே. கொடுங்கள்.
இப்போது உங்கள புகைப்படம் பிரஷ் டூலாக போட்டோஷாப்பில் அமர்ந்துவிட்டது. இனி ஒரு புதிய பைலினை திறந்து கொள்ளுங்கள். அடுத்து பிரஷ் டூலினை தேர்வு செய்துகொள்ளுங்கள். 
உங்களுக்கு மெனுபாரின் கீழே தோன்றும் பிரஷ் என்கிற ஆங்கில எழுத்தின் கீழே உள்ள சிறிய முக்கோணத்தை கிளிக் செய்ய வரும் விண்டோவில் கடைசியில் உங்கள் படம் இருப்பதை காணலாம். அதை தேர்வு செய்து கொள்ளுங்கள். இப்போது புதிய பைலில் நீங்கள் கர்சரால் கிளிக் செய்ய உங்கள் படம் அழகாக தோன்றும்.கீழே உள்ள விண்டோவினை பாருங்கள்.
Master Diameter - எதிரில் உள்ள ஸ்லைடரை நகர்த்தி உங்கள் புகைப்படம் வேண்டிய அளவிற்கு வைத்துக்கொள்ளலாம். சரி ...இந்த புகைப்படமே நமக்கு கலர் கலராக வரவேண்டும். என்ன செய்வது. Foreground கலரை மாற்றிக் கொள்வதுமூலம்விதவிதமான
கலர்களில்புகைப்படங்கள்கொண்டுவரலாம்.
கீழே உள்ள புகைப்படத்தை பாருங்கள்.

சரி. இப்போது நமது கையெழுத்தை எப்படி கொண்டுவருவது.
 உங்கள் கையெழுத்தை தனியே காகிதத்தில் போட்டுகொண்டு 
அதை ஸ்கேன் செய்து புகைப்படமாக மாற்றிக்கொள்ளுங்கள்.
 பின்னர்ஏற்கனவேசொன்னதுபோல்பிரஷ்டூலாக
அதைமாற்றிக்கொள்ளுங்கள்.
உங்கள் புகைப்படத்தை தேர்வு செய்து அதை புதிய
 பைலில பிரஷ் டூல் மூலம் பதிந்துகொள்ளுங்கள். 
இப்போது கையெழுத்துள்ள பிரஷ் டூலையும் கொண்டுவந்து
 அதன் கீழே கிளிக் செய்யுங்கள். கீழே உள்ள புகைப்படத்தை
 பாருங்கள்.

உங்கள் கையெழுத்துடன் புகைப்படம் ரெடி...ஒரு சின்ன எச்சரிக்கை:-அலுவலகங்களில் பயன்படுத்துபவர்கள் உங்கள் ஒரிஜினல் (உண்மையான ) கையெழுத்தில் இதை முயற்சிக்கவேண்டாம். அதை மற்றவர்கள் தவறாக பயன்படுத்த வாய்ப்புள்ளது.(படத்தில் உள்ளதும் நாம் பதிவிற்காக போட்ட டம்மி கையெழுத்து....எப்படி நாம உஷாராக இருக்கனும் இல்ல). அடுத்த பதிவில் விதவிதமான பிரஷ் டூலை எப்படி இன்ஸ்டால் செய்வது மற்றும் உபயோகிப்பதை பற்றி்ப் பார்ககலாம்.இதுவரையில் பயன்படுத்திப்பாருங்கள்.கருத்துக்களை சொல்லுங்கள்.
வாழ்க வளமுடன்,
வேலன்.

JUST FOR JOLLY PHOTOS:-
காலையில் இருந்து உணவு கிடைக்காமல் நான் பசியாக இருப்பதால்  உங்களை ஒன்னும் செய்யமாட்டேன்...என் காலில் உள்ள முள்ளைமட்டும் எடுத்துவிடுங்களேன்....ப்ளிஸ்....
இன்றைய PSD புகைப்படம் கீழே:-
டிசைன் செய்தபின் வந்த புகைப்படம் கீழே:-
இதனை பதிவிறக்க இங்கு கிளிக் செய்யவும்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

வேலன்:-போட்டோஷாப் பிரஷ் டூலில் நமது பெயர்கொண்டுவர

 போட்டோஷாப்பில் இன்று பிரஷ் டூல் பற்றி பார்க்கலாம். இது டூல்பாரில் 8 ஆவதாக உள்ளது. கீழே உள்ள விண்டோவினை பாருங்கள்.

இதன் மூலம் என்ன செய்யலாம். கோடு போடலாம். ரோடு போடலாம். உருவத்தை மறைக்கலாம். உருவத்திற்கு மெல்லிய மீசை போடலாம். சரி இதை எப்படி கொண்டுவருவது. நீங்கள் இந்த டூலை கிளிக் செய்தபின்னர் மேலே உங்களுக்கு மெனு பாருக்கு கீழே பிரஷ் படமும் அதை அடுத்து ஆங்கிலத்தில் Brush: என்று போட்டு அதற்கு பக்கத்தில் ஒரு சின்ன கீழு்நோக்கிய அம்புக்குறியும் இருக்கும். அதை கிளிக் செய்ய உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் 1 முதல் 13 வரையிலும் மெல்லியதாகவும் தடிமனாகவும் விதவிதமான கோடுகள் இருக்கும். தேவையான கோட்டினை கிளிக் செய்து தேவையான படத்தில் வரையவும். அதைப்போல் Master Diameter கீழ் உள்ள ஸ்லைடரை நகர்த்த உங்களுக்கு கோட்டின் சைஸ் பெரியதாகும். கீழே உள்ள படத்தினை பாருங்கள். விதவிதமான சைஸ்களில் கோடு போட்டுள்ளேன்.

இந்த டூல் கொண்டு வேறு என்னவெல்லாம் செய்யலாம்.நமது பெயரையே பிரஷ்டூலாக கொண்டுவரலாம். அதனால் என்ன பயன்...அவசரத்திற்கு இந்த டூல்மூலம் உடனடியாக பெயரை பதித்துவிடலாம்.அதை எப்படி கொண்டுவருவது? முதலில் உங்கள் பெயரை தமிழிலோ ஆங்கிலத்திலோ தட்டச்சு செய்து கொள்ளுங்கள்.(முந்தைய பாடங்களில் பெயரை தட்டச்சு செய்வதை பதிவிட்டுள்ளேன்)கீழே உள்ள படத்தினை பாருங்கள்.


ஆங்கிலத்தில் எனது பெயரை தட்டச்சு செய்துள்ளேன். கீழே உள்ள படத்தினை பாருங்கள்.
 பின்னர் Edit மெனு கிளிக் செய்தால் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
அதில் Define Brush Preset கிளிக் செய்தால் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
O.K. கொடுங்கள். அவ்வளவுதான் உங்கள் பெயர் பிரஷ்டூலாகசெட்டாகிவிட்டது.சரி - இந்த டூலை எப்படி உபயோகிப்பது. நீங்கள் உபயோகிக்கும் படம் அல்லது புதிய விண்டோவினை திறந்து கொள்ளுங்கள்.பின்னர் பிரஷ் டூல் கிளிக்செய்யுங்கள்.மெனுபாரின் கீழே உள்ள ஆங்கில எழுத்து பிரஷ் பக்கத்தில் உள்ள கீழ் நோக்கிய அம்புக்குறியை கிளிக் செய்யுங்கள். உங்களுக்கு விண்டோ ஓப்பன ஆகும். அதில் உள்ள ஸ்ரால் பாரினை கீழே நகர்த்த கடைசியில் உங்கள் பெயருடன் கோடு இருக்கும் . அதை கிளிக் செய்யுங்கள். இப்போது நீங்கள் எந்த இடத்தில் உங்கள் பெயர் வர விரும்புகின்றீர்களோ அந்த இடத்தில் வைத்து ஒரே ஒரு கிளிக்செய்யுங்கள். அவ்வளவுதான் உங்கள் பெயர் வந்துவிட்டது. நீங்கள்Forgroundcolor கலராக எதை வைத்துள்ளீர்களோ அந்த கலருடன் பெயர் வந்துவிடும். உங்களுக்கு உங்கள் பெயர் திக்காக வரவேண்டுமானால் மவுஸால் தொடர்ந்து அழுத்துங்கள். அதைப்போல் உங்கள் எழுத்தின் அளவினை அதிகப்படுத்தவிரும்பினால் Master Diameter -ல் உள்ள ஸ்லைடை நகர்த்துங்கள். அவ்வளவுதான் உங்கள் பெயர் பெரிதாக வரும். கீழே உள்ள படத்தினை பாருங்கள்.
உங்கள் பெயரில் பிரஷ்டூல் கொண்டுவருவதை பற்றி தெரிந்துகொண்டோம் அல்லவா..அடுத்த பதிவில் நமது புகைப்படத்தை பிரஷ் டூலாக கொண்டுவருவதைப்பற்றி பார்க்கலாம். அதைப்போலவே விதவிதமான பிரஷ்டூல்கள் பற்றியும் அதை எப்படி போட்டோஷாப்பில் இணைப்பது என்றும் பார்க்கலாம். பதிவின் நீளம் கருதி இத்துடன் முடித்துக்கொள்கின்றேன்.
வாழ்க வளமுடன்,
வேலன்.
JUST FOR JOLLY PHOTOS:-
ம்...கண்டுக்காதீங்க..சமையல் பதிவை பார்த்து வீட்டில்
 செய்துபார்த்தேன்.அதுஎன்னவோதெரியலை...
இப்படியாகிவிட்டது...யாரிடமும் இதை சொல்லாதீங்க...!
இன்றைய PSD புகைப்படம் கீழே:-
 டிசைன் செய்தபின் வந்த புகைப்படம் கீழே:-
இதை பதிவிறக்க இங்கு கிளிக் செய்யவும்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

வேலன்:-நமது புகைப்படத்தில் சுலபமாக ஆல்பம் தயாரிக்க

நம்மிடம் நிறைய போட்டோக்கள் இருக்கும். அதையே ஆல்பமாக விருப்பமான பாடல்களுடன்,வேண்டிய பின்னணியுடன் பார்க்கும் சமயம் அருமையாக இருக்கும். நமது விருப்பங்களை இந்த சாப்ட்வேர் நிவர்த்தி செய்கின்றது. இதை பிளாஷ் பைலாகவோ - எச்.டி.எம்.எல். பைலாகவோ நாம் சேமித்துக்கொள்ளலாம்.17 எம்.பி. கொள்ளளவு கொண்ட இதை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளி்க் செய்யவும்.இதை நீங்கள் கணிணியில் இன்ஸ்டால் செய்து ஒப்பன் செய்துகொள்ளவும். இதில் முதலில் உள்ளது டெம்பிளேட் டிசைன்கள்.இதில் மொத்தம் 40 க்கும் மேற்பட்ட டெம்பிளேட் டிசைன்கள் உள்ளது.கீழே உள்ள விண்டோவினை பாருங்கள்.
இதில் தேவையான டிசைனை தேர்வு செய்ததும் உங்களுக்கு பக்கத்தில் உள்ள விண்டோவில் பிரிவியு தெரியும்.
மற்றும் ஓரு டெம்பிளேட் டிசைன் கீழே:-
அடுத்துள்ளது போட்டோ கலெக்ஷன்.இதில் உள்ள Add கிளிக் செய்து உங்கள் புகைப்படங்கள் உள்ள டிரைவை தேர்வு செய்து தேவையான புகைப்படங்களை சேர்ததுக்கொள்ளுங்கள். 
சாம்பிளுக்கு நான் தேர்வு செய்த புகைப்படங்கள் கீழே:-

மூன்றாவது டேப் பேக்கிரவுண்ட் இசை.இதில் தேவையான உங்களுக்கு விருப்பமான பாடலை தேர்வு செய்து கொள்ளுங்கள். அடுத்துள்ளது ஸ்பெஷல் செட்டிங்ஸ்.
தேவையான செட்டிங்ஸ் செய்து கொள்ளுங்கள். இறுதியாக Generate கிளிக் செய்யுங்கள். உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன ஆகும். தேவையானதை கிளிக் செய்து ஒ.கே. கொடுஙகள்.
உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் :ஆகும்.
நீஙகள் சேமித்துவைத்துள்ள இடத்தில் சென்று பார்த்தால் உங்கள் புகைப்பட ஆல்பம் பிளாஷ் பைலாகவும் - எச்.டி.எம்.எல்.பைலாகவும் இருக்கும்.தேவையான பைலை ஓப்பன்செய்து பாருங்கள்.கீழே உள்ள விண்டோவினை பாருங்கள்.
பதிவின் நீளம் கருதி இத்துடன் முடித்துக்கொள்கின்றேன். 
 வாழ்க வளமுடன்  
 வேலன்.
JUST FOR JOLLY PHOTOS:-
டேய்...டேய்...ரொம்ப சாயாதடா....சாய்ந்துகொண்டே வருகின்றது...
இன்றைய PSD டிசைன் புகைப்படம் கீழே:-

இதை பதிவிறக்கம் செய்தபின் வந்த புகைப்டம் கீழே:-
இதனை பதிவிறக்க இங்கு கிளிக் செய்யவும். பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

பக்கங்கள்

பிரபலமான இடுகைகள்