வேலன்:-போட்டோஷாப்பில் தமிழ் எழுத்துக்கள்

சற்றே கண்மூடி கண்திறப்பதற்குள் 250 ஆவது பதிவு வந்துவிட்டது.பின்தொடரும் 400 தோழர்களுக்கும்,அன்பும் ஆதரவும் கொடுத்துவரும் சக பதிவு நண்பர்கள்-,சகோதரிகளுக்கும் மற்றும் உள்ள  அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றி...தொடர்ந்து உங்கள் ஆதரவை வேண்டி...
அன்புடன்.
வேலன்.


இன்ஸ்டன்ட் காபி,இன்ஸ்டன்ட் இட்லி,வடை போல் இது போட்டாஷாப்பில் பயன்படுத்த இனஸ்டன்ட் பாண்ட்கள் உள்ளது. அதை பற்றி இங்கு இன்று காணலாம்.முதலில் இதை பதிவிறக்க இங்கு கிளிக் செய்யவும்.இதை பதிவிறக்கம் செய்து உங்கள் கணிணியில் சேமித்துக்கொள்ளுங்கள். இது PSD பைலாக உள்ளது.உங்களுக்கு கீழ்கண்ட பைல்கள் கிடைக்கும்.
இரண்டாவது பைல்:-
மூன்றாவது பைல்:-
நான்காவது பைல்:-
ஐந்தாவது பைல்:-
ரைட். இப்பொழுது அதை எப்படி உபயோகிப்பது என்று பார்க்கலாம். முதலில் எழுத்துக்களை எந்த புகைப்படங்களில் வைக்கப்போகின்றீர்களோ - அந்த புகைப்படத்தை தேர்வுசெய்துகொள்ளுங்கள்.அதைப்போல் இந்த பாண்ட்களின் PSD பைலையும் திறந்து கொள்ளுங்கள். இப்போது நீங்கள் F 7 கீயை அழுத்துங்கள். உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். அதில் நீங்கள் எந்த வார்த்தையை வேண்டுமோ அதை இந்த லெயர் விண்டோவில் தேர்வுசெய்து(நீங்கள் தேர்வு செய்ததும் அந்த எழுத்து நீலக்கலரில் மாறிவிடும்) கர்சரால் இழுத்துவந்து புகைப்படத்தில் விட்டுவிடுங்கள்.
இப்போது கீழ்கண்ட புகைப்படத்தை பாருங்கள்.
எழுத்துக்கள் கொண்டுவந்தபின் வந்த படத்தை பாருங்கள்.
ஆங்கில எழுத்துக்கள் சரி...இதுவே தமிழ் எழுத்துக்கள் கொண்டுவருவது எப்படி.உங்கள் கணிணியில் தமிழ் எழுத்துக்கள் இருந்தால் சரி. இல்லையென்றால் இந்த லேயர் விண்டொவில் உங்களுக்கு கட்டம் கட்டமாக தெரியும்.அந்த நேரத்தில் லேயர் விண்டொவில் உள்ள கண்போன்ற அமைப்பை கிளிக் செய்யுங்கள். இப்போது பாண்ட்கள் விண்டோவை பாருங்கள்.எந்த வாக்கியம் மறைகின்றதோ அதுவே நீங்கள் தேர்வு செய்த வாக்கியம் ஆகும். முன்பு சொன்னதுபோல் அதை தேர்வு செய்து இழுத்துவந்து புகைப்படத்தில் விட்டுவிடுங்கள். அவ்வளவுதான். இன்ஸ்டனட் எழுத்துக்களுடன் புகைப்படம் ரெடி.இதில் உங்கள் ரசனைக்கு ஏற்றவாறு புகைப்படத்திற்கு ஏற்ற வார்த்தைகளை தேர்வு செய்யுங்கள். வார்த்தைகள் பொருந்துவதாகவும் இருக்கவேண்டும் - அதேசமயம் நகைச்சுவையாகவும் இருக்கவேண்டும்.கீழே உள்ள புகைப்படத்தை பாருங்கள்.:-
பயன்படுத்திப்பாருங்கள். கருததுக்களை சொல்லுங்கள்.பதிவின் நீளம் கருதி இத்துடன் முடித்துக்கொள்கின்றேன்.அடுத்த பதிவும் கருத்துரைக்கு பதில்களும் 28.02.2010 அன்று காலை.மீண்டும் சந்திப்போம்.
வாழ்க வளமுடன்,
வேலன்.
JUST FOR JOLLY PHOTOS:-
அட...சும்மா எட்டி பார்த்தேன்பா... ஓனர்அம்மா தலை பின்னால் இருக்குப்பா...
இன்றைய PSD புகைப்படம் கீழே:-
டிசைன் செய்தபின் வந்த புகைப்படம் கீழே:-
இந்த டிசைனை பதிவிறக்க இங்கு கிளிக் செய்யவும்.

பின்இணைப்பு:- இத்துடன் +2  பாடத்திற்கான கணித வினா களின் தொகுப்பு இங்குஇணைத்துள்ளேன். உங்களுக்கு தெரிந்தவர்கள் இருந்தால் பகிர்ந்துகொள்ளவும். 
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

வேலன்:-போட்டோஷாப்பில் நிழலுடன் எழுத்துக்கள் கொண்டுவர


போட்டோஷாப்பில் இன்று  நிழலுடன் எழுத்துக்கள்
கொண்டுவருவது எப்படி என்று பார்க்கலாம்.
முதலில் நீங்கள்புதிய விண்டோவினை கீழ்கண்ட
அளவில்திறந்துகொள்ளுங்கள்.

  
போட்டோஷாப்பில் டெக்ஸ்ட் டூலை தேர்வு செய்யுங்கள்.
இது போட்டோஷாப் டூல்பாரில் 16 ஆவது டூல்லாக
உள்ளது.T என்கின்ற ஆங்கில எழுத்து போட்டு இருக்கும்.
அதை கிளிக் செய்யுங்கள்.(வரிசையாக டூல்கள் பற்றிய
பாடத்தில் இந்த டூல்பற்றி நாம் விரிவாக பார்க்கலாம்)
ரைட். இப்போது உங்களுக்கு தேவையான எழுத்துருவை
தேர்வு செய்யுங்கள்.எழுத்துகள் மேலே உள்ள பாரில்
தெரியும்.தமிழ் வேண்டுபவர்கள் நான் ஏற்கனவே
கொடுத்துள்ள பாமினியை இன்ஸ்டால் செய்துகொள்ளவும்.
லதாவிலும் தமிழ் எழுத்துரு வரும்.உங்கள் 
பார்வைக்கு எனது பெயரை தமிழிலும் ஆங்கிலத்திலும்
தட்டச்சு செய்துள்ளேன். கீழே உள்ள படத்தை 
பாருங்கள்.

 


எழுத்துக்களுக்கு தேவையான வண்ணங்கள் கொடுத்து
கொள்ளுங்கள். ரைட். இப்போது மேலே உள்ள
லேயர் டெப்பிற்கு வாருங்கள்.அதை கிளிக் செய்தால்
உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.அதில்
லேயர் ஸ்டைல் - ஸ்டோக் -கிளிக் செய்யுங்கள்.


இப்போது உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஒப்பன்ஆகும்.
 
இதில் சைஸ் -3, பொஸிசன் -அவுட் சைட், என இதில் 
உள்ள அளவுகளையே வைத்துக்கொள்ளுங்கள்.
இப்போது நீங்கள் தட்டச்சு செய்த எழுத்து மாறுவதை
காணலாம். கீழ்கண்ட விண்டோவினை பாருங்கள்.
ஒ.கே. கொடுங்கள்.
  
 நாம் ஏற்கனவே தட்டச்சு செய்ததற்கும் இப்போதுக்கும்
எழுத்து மாறிஉள்ளதை கவனியுங்கள்.
  
அடுத்து மீண்டும் அதேப்போலவே லேயர் - லேயர்
ஸ்டைல் - கிராடியன்ட் ஓவர்லே தேர்வு செய்யுங்கள்.
கீழே உள்ள படத்தை பாருங்கள்.
  
அதிலும்  Blendmode=Normal, Opacity=40%,Gradiant (இந்த
டூலுக்கு எதிரில் உள்ள அம்புகுறியை கிளிக்
செய்தால் உங்களுக்கு நிறைய மாடல்கள்
கிடைக்கும். அதைப்பற்றி விரிவாக ஒரு 
பாடத்தில் சொல்கின்றேன். தற்சமயம் அதில் உள்ள
டிசைனையே தேர்வு செய்து கொள்ளுங்கள்)Style= Liner,
Angle =90 Scale 100% என அதில் உள்ள அளவுகளையே
கொடுத்து ஓ.கே. கொடுங்கள்.
  
இப்போது மீண்டும் லேயர் - லேயர் ஸ்டைல் -பெவல்
அண்ட் எம்போஸ் ( Bevel and Emboss) கிளிக்செய்யுங்கள்.
  
தேவைப்பட்டால் அளவுகளை மாற்றிக்கொள்ளுங்கள்.
 இல்லையென்றால்அதில் உள்ள அளவுகளை 
அப்படியே ஓ.கே. கொடுங்கள்.
 இப்போது மீண்டும் லெயர் - லெயர்ஸ்டைல்-
டிராப் ஷோடோ கிளிக் செய்யுங்கள்.
  
இதிலும் அதே அளவுகளை ஓ,கே. கொடுங்கள்.
கடைசியாக இதன் டுப்ளிகேட் தேர்வு செய்ய கீழ்
கண்டவாறு தேர்வு செய்யுங்கள்.
  
 ஒ.கே. கொடுங்கள். இப்போது உங்கள் எழுத்துக்கள்
மீதே மற்றும் ஒரு காப்பி அமர்ந்திருக்கும். இப்போது
மூவ் டூல் கொண்டு (டூல்பாரில் இரண்டாவதாக
இருக்கும் டூல்) உங்கள் எழுத்தினை மெல்ல
மவுஸால் கீழே இழுங்கள். எழுத்தின் பிம்பம் கீழே
வருவதை காணலாம்.
  
இப்போது மீண்டும் லேயர் ஸ்டைல் தேர்வு செய்து 
அதில் Opacity யை உங்களுக்கு தேவையான அளவுக்கு
வைத்துக்கொள்ளுங்கள். நீங்கள் அந்த அளவினை
குறைக்க குறைக்க உங்கள் எழுத்தின் நிறம் மங்கி
வருவதை காணலாம்.


  
 தேவையான அளவு வந்ததும் ஒ.கே. கொடுங்கள்.கீழே
உள்ள படத்தை பாருங்கள்.
  
உங்களுக்காக மற்றும் ஒரு எழுத்தில் டிசைன் செய்தது.
உங்களுக்கு எழுத்துக்கள்சரியாக வந்துவிட்டால் 
புகைப்டங்களிலே எழுத்துக்களைகொண்டுவரலாம்
கோலர்லம்பூர் நண்பர் பெயரில் எழுத்துரு:-
 
பதிவின் நீளம் கருதி இத்துடன் முடித்துக்கொள்கின்றேன்.
 அதிக படங்களுடன் விளக்கவேண்டியுள்ளதால்
இந்த பக்கம் திறக்க நேரம் ஆவதை பொறுத்துக்
கொள்ளவேண்டுகின்றேன்.
எதேனும் சந்தேகமிருந்தால் கருத்தினில் கேளுங்கள்.
வாழ்க வளமுடன்.
வேலன்.
JUST FOR JOLLY PHOTOS:-
வரேன் சொன்னாரு....இன்னும் வரக்காணேமே...!
 
இன்றைய PSD டிசைன் புகைப்படம் கீழே:-
 டிசைன் செய்தபின் வந்த புகைப்படம் கீழே:-
 
இதை பதிவிறக்க இங்கு கிளிக் செய்யவும்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

வேலன்:-போட்டோஷாப் பாடம் -36 செய்முறை விளக்கம்


 எனது திருமண நாள் அன்று பதிவில் வாழ்த்திய 70 அன்பு 
உள்ளங்களுக்கும் - தொலைபேசியிலும்-இ-மெயிலிலும் -
 நேரிலும் வந்து வாழ்த்திய திரு.மாணிக்கம்,(படத்தில் உடன் 
இருப்பவர்)திரு.ஆனந்தன், திரு.சேகர் ஆகிய அனைவருக்கும் 
எங்களதுஉளமார்ந்த நன்றிகளுடன்,
வேலன்.


போட்டோஷாப் பாடத்தில் இன்று நாம் முந்தைய பாடத்தின்
தொடர்ச்சியை காணலாம். Patch Tool மூலம் நாம் ஒருவரின்
தலையையே சுலபமாக மாற்றிவிடலாம். ஒருபடத்தில்
தேவையில்லையென்று நினைத்தால் அந்த பகுதியையே
முற்றிலும் நீக்கி விடலாம். கீழே உள்ள படத்தை பாருங்கள்.
இதில் நான் நீக்கும் பகுதியை இந்த டூல் கொண்டு தேர்வு
செய்துள்ளேன். பின்னர் காலியாக உள்ள இடத்தில்
அதை நகர்த்தி உள்ளேன்.கீழே உள்ள படத்தை பாருங்கள்.
முன்பாடத்தில் சொன்னவாறு நகர்த்தி என்டர் தட்டியவுடன்
வந்துள்ள படத்தை பாருங்கள்.
நண்பரின் தலையை மாற்றலாம். கீழே உள்ள படத்தை
பாருங்கள்.
அவரின் உடம்பில் எனது தலையை பொருத்தியுள்ளேன்.
இப்போது எனது உடம்பில் அவரின்தலையை பொருத்தியபின்:-
எனது மகனையும் விட்டுவைக்கவில்லை:-
மேல்படம் அவர் உடம்பில் பெண்தலை,கீழ்படம் பெண்
உடம்பில் அவரின் தலை.
 
இந்த டூலில்  Feather Radius உடன் அமைந்துள்ளதால் சிறிது
அளவு ரேடியஸ் உடன் படம் அமையும். முகத்தில் பரு,
தழும்பு. மரு முதலியவைகளை நீக்கும் சமயம் அது தெரியாது.
பெரிய அளவில் வரும் சமயம் சற்று தெரியும். இந்த டூல்
மூலம் இதையும் செய்யலாம் என உணர்த்தவே இதை
பதிவிட்டுள்ளேன். பதிவின் நீளம் கருதி இத்துடன் முடித்து
கொள்கின்றேன்.
வாழ்க வளமுடன்,
வேலன்.
JUST FOR JOLLY PHOTOS:-
ஏய்....மொத்தப்பழத்தையும் நான்தான் சாப்பிடுவேன்.
உனக்கு தரமாட்டேன் போ....!
இன்றைய  PSD டிசைன் படம் கீழே:-
  
டிசைன் செய்தபின் வந்த புகைப்படம் கீழே:-
 
இந்த டிசைனை பதிவிறக்க இங்கு கிளிக் செய்யவும்..
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

பக்கங்கள்

பிரபலமான இடுகைகள்