வேலன்:-போட்டோஷாப் பாடம்-35 PATCH TOOL



போட்டோஷாப்பில் இன்று PATCH TOOL பற்றி பார்ப்போம்.
இது சென்ற போட்டோஷாப்பில் பார்த்த Spot Healing Brush Tool
உடன் உள்ள உப டூல் ஆகும்.

சரி... இதன் மூலம் என்ன செய்யலாம். சேதமான பகுதியை
எடுத்துவிட்டு நல்ல பகுதியை பொருத்தலாம். நீங்கள்
பிளாஸ்டிக் சர்ஜரியை பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள்.
நமது உடலிலிருந்து நல்லபகுதியை எடுத்து தேவையான
பகுதியில் பொருத்துவார்கள். அதுபோல் இந்த டூல் மூலம்
நமது முகத்தில் மேடு பள்ளமோ - வெட்டுக்காயமோ -
முகப்பருவோ - இருந்தால் இதன் மூலம் ச்ரிசெய்யலாம்.
சென்ற பதிவில் முகப்பருவை நீக்குவது பற்றி போட்டு
விட்டதால் இன்றைய பதிவில் வேறு உபயோகத்தினை
பார்க்கலாம். முகப்பரு - வெட்டுக்காயம் - மேடு பள்ளம்
நீக்குதலுக்கும் இந்த டூல் மிகவும் பயன்படும்.
கீழே உள்ள படத்தை பாருங்கள். இந்த படத்தில் உள்ள
மீன்கொத்திப் பறவை நமக்கு தேவையில்லை..அதை
எப்படி நீக்கலாம் என இப்போது பார்க்கலாம்.


இந்த டூலை தேர்வு செய்து கொள்ளுங்கள். உங்களுக்கு சதுர
மாக கர்சர் மாறும். பின்னர் படத்தின் அருகே வைத்து வரைந்து
கொண்டு வாருங்கள்.கோடு பொட்டது மாதிரி வருகின்றதா....
கீழே உள்ள படத்தை பாருங்கள்.

தேவையான பகுதியை முழுவதும் தேர்வு செய்த கோட்டினை
நிறைவு செய்யுங்கள்.

இப்போது கர்சரை நடுவில் வைத்து அந்த பகுதியை மெது
வாக நல்ல பகுதிக்கு நகர்த்துங்கள். உங்கள் படம் கண்ணாடி
போல் மாறி நல்ல பகுதி வருவதை காண்பீர்கள். கீழே உள்ள
படத்தை பாருங்கள்.

எந்த இடம் தேவையோ அதுவரை நகர்த்தி பின் என்டர்
தட்டுங்கள்.

இப்போது பாருங்கள் மீ்ன்கொத்தி காணமல் போயிருக்கும்.

மேலும் உங்கள் உதாரணத்திற்கு கீழே உள்ள படத்தை பாருங்கள்.
அதில் உள்ள நாற்காலியை எடுத்துவிடலாம்.

நாற்காலியை எடுத்தஉடன் வந்துள்ள படத்தை பாருங்கள்.
நா
இதைப்போல் தேவையில்லாத பகுதியை எடுத்துவிட்டு
 தேவையான பகுதியை சுலபமாக வைத்துவிடலாம்.
மேலும் இதன் மூலம்என்னவெல்லாம் செய்யலாம்....
அது அடுத்தபாடத்தின் பதிவில்...
பதிவின் நீளம் கருதி இத்துடன் முடித்துக்கொள்கின்றேன்.
இதை நீங்களும் செய்து பாருங்கள். கருத்தினை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்,
வேலன்.
JUST FOR JOLLY PHOTOS:-
ம்...பூ வெல்லாம் பறிதது கொடுத்து எப்படியெல்லாம்
ஐஸ் வைக்க வேண்டியிருக்கு பாருங்க...

இன்றைய PSD டிசைனுக்கான புகைப்படம் கீழே:-

டிசைன் செய்தபின் வந்த புகைப்படம் கீழே:-

இதை பதிவிறக்கம் செய்ய இங்குகிளிக் செய்யவும்.
இதுவரை போட்டோஷாப்பில் பேட்ச் டூலை தெரிந்து
கொண்டவர்கள்:-
web counter பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

வேலன்:-போட்டோஷாப் பாடம் -34 முகப்பரு நீக்க




போட்டாஷாப்பில் பாடம் போட்டு நிறைய நாட்கள் ஆகி
விட்டதாக கருத்துரையில் நண்பர் கேட்டிருந்தார். நேரம்
குறைவாக இருப்பதே தாமதத்திற்கு காரணம்..இனி
பாடத்திற்கு வருவோம். இன்றைய போட்டோஷாப்பில்
முகப்பரு -தழும்பு -  சிறிய வெட்டுக்காயம் ஆகியவற்றை
எப்படி நீக்குவது என காணலாம். முதலில் முகப்பரு உள்ள
புகைப்படத்தை திறந்துகொள்ளுங்கள். (நான் பிரபல
நடிகையின் மேக்கப் போடுவதற்கு முன் உள்ள புகைப்படத்தை
எடுத்துள்ளேன்.நடிகை யார் என்று கண்டுபிடித்து
கருத்துரையில் சொல்லுங்கள் பார்க்கலாம்)

இப்போது 7 ஆவதாக உள்ள டூலை தேர்வு செய்து கொள்ளுங்கள்.
அதில் கர்சரை வைத்ததும் அதில் முதலில் உள்ள Spot Healing
Brush Tool தேர்வு செய்யுங்கள்.

இப்போது புகைப்படத்தில் முகப்பரு உள்ள இடத்தை நான்
சுட்டி காட்டியுள்ளேன். கீழே உள்ள புகைப்படத்தை பாருங்கள்.

இப்போது செல்ட் செய்த டூலை முகத்தில் நன்றாக உள்ள
இடத்தில் வைத்து ஆல்ட் கீயை அழுத்துங்கள். சிறிய வட்டம்
வரும். பின்னர் கர்சரை எடுத்துவந்து முகப்பரு உள்ள

இடத்தில் அழுத்துங்கள். முகப்பரு நொடியில் மறைந்துவிடும்.
(எந்த கீரீமும் போடாமலே உங்களுக்கு முகம் அழகாக மாறி
விட்டதை காணலாம். ) அதுப்போல் முகப்பரு உள்ள
இடங்களில் இதுபோல் செய்யுங்கள். கீழே உள்ள படத்தை
பாருங்கள்.

எப்படி மாறிவிட்டதை பார்த்தீர்களா?.....
சரி இந்த டூல் வேறு எதற்கு பயன் படும். ஓருவர் முகத்தை
மறைக்க இந்த டூலை பயன்படுத்தலாம்.நிறைய பத்திரிக்கை
களில் பார்த்திருப்பீர்கள். முகத்தை மறைத்துள்ள நடிகை யார்
என்று கண்டுபிடியுங்கள் என எழுதியிருப்பார்கள். அவ்வாறு
முகத்தை மறைக்க இந்த டூல் பயன்படும். கீழே உள்ள புகைப்
படத்தை பாருங்கள். நடிகர் Surya மற்றும் Sri Devi உள்ளனர்.

மேலே சொன்னது போல் இந்த டூலைசெலக்ட் செய்தபின் வெற்றிடத்தில
 வைத்து ஆல்ட் கீயை கிளிக் செய்து முகத்தின் மீது கர்சரால்
தேயுங்கள். உங்களுக்கு கருப்பு நிறத்துடன் படம் மறைவதை
காணுங்கள். கீழே உள்ள படத்தை பாருங்கள்.

இறுதியாக முகம் அனைத்தும் மறைத்ததும் கர்சரை எடுத்து
விடுங்கள். இப்போது முகம் மறைந்துள்ளதை காணலாம்.
கீழே உள்ள புகைப்படத்தை பாருங்கள்.

பதிவின் நீளம் கருதி பாடத்தை இத்துடன் முடித்துக்கொள்கின்றேன்.
பயன்படுத்திப்பாருங்கள். கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்,
வேலன்.
JUST FOR JOLLY PHOTOS:-
அம்மா...அம்மா என்னை குதிரை சவாரி ஏற்றிக்குனுபோம்மா...

இன்றைய PSD டிசைனுக்கான புகைப்படம் கீழே:-

டிசைன் செய்தபின் வந்த படம் கீழே:-

இதை பதிவிறக்க இங்குகிளிக் செய்யவும்.
முகப்பருவை நீக்க இதுவரை கற்றுக்கொண்டவர்கள்:-
web counter
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

பக்கங்கள்

பிரபலமான இடுகைகள்