Slo-mo pie to the face   /   gifbin.comSlo-mo pie to the face   /   gifbin.comhttp://pixdaus.com/pics/12809656085EawBSb.jpg பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

வேலன்:-மூன்று வெவ்வேறு புகைப்படங்களை ஒரே புகைப்படமாக்க


சில நேரங்களில் நாம் பெரிய அளவில் புகைப்படங்கள் எடுக்க வேண்டிவரும்.உதாரணத்திற்கு குரூப் போட்டோ எடுக்கும் சமயம் நம்மிடம் உள்ள சின்னகேமராவில் அவ்வளவு கும்பலையும் கவர் செய்வது கடினமே.அந்த படத்தை நாம் போட்டோஷாப்பில் ஒன்றாக ஆக்கலாம். ஆனால் இந்த சாப்ட்வேரில் ஒட்டியதே தெரியாமல் அழகாக ஒட்டி கொடுக்கின்றது. இது டிரையல் விஷன் சாப்ட்வேர். இதனை பதிவிறக்க இங்கு கிளிக் செய்யவும்.
நான் உதாரணத்திற்கு இங்கு 3 புகைப்படங்கள் வெவ்வேறு கோணத்தில் வைத்து எடுத்துள்ளேன்.கீழே உள்ள புகைப்ப்டங்களை பாருங்கள்.முதல் பாக புகைப்படம்.:-
இரண்டாவது பாக புகைப்படம்:-
மூன்றாவது பாக புகைப்படம்:-
இப்போது இந்த சாபட்வேரில் புகைப்படங்கள் உள்ள போல்டரை தேர்வு செய்து அதில் இந்த மூன்று புகைப்படங்களை மட்டும் தேர்வு செய்துள்ளேன்.
இதில் உள்ள Start Stich கிளிக் செய்தபின் வந்த விண்டோ கீழே:-
படங்களை ஆய்வு செய்கின்றது:

இப்போது மூன்று படங்களையும் ஒட்டியவாறு நமக்கு விண்டோ கிடைக்கும்.

அடுத்துள்ள Export கிளிக் செய்தால் Crop செய்யும் விண்டோவுடன் நமக்கு கீழ்கண்ட படம் ஓப்பன் ஆகும். தேவையேன்றால் இதில் உள்ள ஸ்லைடரை நகர்த்தி நாம் புகைப்படத்தை ஒழுங்கு செய்து கொள்ளலாம்.
இறுதியாக ஓ,கே.கொடுங்கள். கீழ்கண்ட வாறு உங்களுக்கு விண்டோ ்தோன்றும்.
அவ்வளவுதாங்க. உங்கள் புகைப்படம் முன்றும் ஒன்று சேர்ந்து ஓரே புகைப்படமாக மாறிவிட்டது.கீழே உள்ள விண்டோவினை பாருங்கள்.
பயன் படுத்திப்பாருங்க்ள.கருத்தினை கூறுங்கள். பதிவின நீளம கருதி இத்துடன முடித்துக்கொள்கின்றேன்.
வாழ்க வளமுடன்,
வேலன்.
JUST FOR JOLLY PHOTOS:-
அட போங்கப்பா...நேற்று பார்த்டே பார்டியில செம கவனிப்பு..சாப்பிட்டதே வயிறு நிரம்பி நகர முடியாமல் நானே படுத்துகிடக்கேன். நீங்க வேறே...
இன்றைய PSD  டிசைன் கீழே:-
டிசைன் செய்த பின் வந்த புகைப்படம் கீழே:-
இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும். பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

வேலன்:-போட்டோஷாப் செய்முறை பயிற்சி


வித்தியாசமாகவும் புதுமையாகவும் புகைப்படங்களை வெளியிடுவதில் விகடனுக்கு நிகர் விகடனே...அதில் வரும் புகைப்படங்களைபார்த்தே நாம் போட்டாஷாப்பில் புதுமையான டிசைன்களை கற்றுக்கொள்ளலாம்.  அப்படிதான் சில வருடங்களுக்கு முன்னர் (சுமார் 4 வருடங்களுக்கு முன்னர்) விகடனில் ஒரு மனிதர் அவருடைய தலையை கையில் வைத்துள்ளதாக படம் வெளிவந்தது. அது எப்படி செய்திருப்பார்கள் என யோசித்து அப்போதே நான் செய்துபார்த்த புகைப்படங்கள் இது. இனி இதை எப்படி நாம் கொண்டுவரலாம் என பார்க்கலாம்.முதலில் கையை தனியே வைத்து புகைப்படம் எடுத்துக்கொள்ளவும். படம் கீழே:-
அதைப்போலவே முகத்தை பிடிததுள்ளதுபோல் மற்றும் ஒரு புகைப்படம் எடுத்துக்கொள்ளவும். ஆனால் இருக்கும் போசிஷன் மாறக் கூடாது.கை மட்டும் தான் மாற வேண்டும்.
இப்போது பென் டூல் மூலம் இரண்டாவது படத்தில தலையை மட்டும் கட் செய்து பின்னர் மூவ் டூல் மூலம் நகர்த்தி பின்னர் டிரான்ஸ்பார்ம் டூல்(Ctrl+T -அழுத்தினால் வரும் டூல்) மூலம் சரியாக பொருத்தவும். கீழே உள்ள புகைப்படத்தை பாருங்கள்.
இதைப்போல மற்றும் ஓரு புகைப்படம் கீழே:-
குறிப்பிட்ட வயது வரைதான் மகன்கள் நமக்கு குழந்தை.நமக்கு 60 வயதாகிவிட்டபின் நாம்தான் அவர்களுக்கு குழந்தை.அதை உணர்த்தவே இந்த புகைப்படம்.முதலில் புகைப்படம் எடுத்துக்கொள்ளவும்.
இப்போது மகன் படத்தை பென்டூலால் கட் செய்து மூவ் டூலால் நகர்த்தி எனது தலையில பொருத்தவும்.கீழே உள்ள புகைப்படத்தை பாருங்கள்.
இப்போது எனது புகைப்படத்தை கட் செய்து அதைப்போல நகர்த்தி எனது மகன் தலையில் வைத்து டிரான்ஸ்பார்ம் டூலால் அட்ஜஸ்ட் செய்ய வேண்டும். கீழே உள்ள புகைப்படத்தை பாருங்கள்.
பார்க்க வேடிக்கையாக இருக்கலாம்.போட்டாஷாப் என்றாலே வேடிக்கையும் கற்பனையும் தானே.  போட்டாஷாப்பில இதை ஒர்க் செய்து பாருங்கள்.பதிவின் நீளம் கருதி இத்துடன் முடித்துக்கொள்கின்றேன்.
வாழ்க வளமுடன்.
வேலன்.
JUST FOR JOLLY PHOTOS:-
குளோசப் உபயோகிக்க சொன்னால் உபயோகிக்காமல் இப்படி குளோசப்பில் வந்து வாயை பிளக்கிறேயே....!


இன்றைய PSD டிசைன் புகைப்படம் கீழே:-
டிசைன் செய்தபின் வந்த புகைப்படம் கீழே:-
இதனை பதிவிறக்க இங்கு கிளிக் செய்யவும். பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

வேலன்:-போட்டோஷாப் -குளோன் ஸ்டாம்ப் டூல் -தொடர்ச்சி.

போட்டோஷாப்பில் சென்ற பதிவில் Clone Stamp Tool பற்றி பார்த்தோம். இந்த பதிவிலும் அதன் தொடர்ச்சியை பார்க்கலாம்.இந்த பதிவு மொத்தம் செய்முறை பயிற்சியே...சென்ற பதிவை பார்க்காமல் விட்டவர்கள் இங்கு கிளிக் செய்து பார்த்துக்கொள்ளவும். சாதாரணமாக முகத்தில் மேடு பள்ளங்கள் ஏற்படுவது சகஜமே...இந்த படத்திலும் உள்ள சிறு பள்ளத்தை எப்படி நீ்க்குவது என்று பார்க்கலாம்.
 குளோன் ஸ்டாம்ப் டூல் ஐ முதலில் தேர்வு செய்து பின்னர் முகத்திலேயே நன்றாக உள்ள இடத்தில்  தேர்வு செய்து Alt Key யை அழுத்திய பின்னர் பாதிக்கப்பட்ட இடத்தில் வைத்து கர்சரை அழுத்தியவாறு மெதுவாக தேய்க்கவும். பள்ளம் மறைவதை காணலாம்.கீழே உள்ள படத்தை பாருங்கள். 
ரோஜா செடியில் இரண்டு பூக்கள் மலர்ந்துள்ளதை கீழே பார்க்கலாம்.

அதே பூக்களை செடிநிறைய பூத்துள்ளதாக மாற்றி அமைக்கலாம். கீழே உள்ள படத்தை பாருங்கள்.
நான் பிடித்த முயலுக்கு மூன்று கால் என்பார்கள். இங்கு பாருங்கள். நான் படம்பிடித்த குரங்குக்கு ஐந்து கால்கள் உள்ளது.
உண்மையில் அதற்கு நான்கு கால்கள் தான். போட்டோஷாப் உதவியில் அதற்கு எக்ஸ்ட்ரா ஒரு கால் வரைந்துள்ளேன்.அதன் ஒரிஜினல் புகைப்படம் கீழே:-(அடையாளம தெரியாமல் இருப்பதற்காக அது முகத்தை திருப்பிகொண்டுள்ளது)
கீழே உள்ள சிறுமியின் புகைப்படம் பாருங்கள்.
சிறுவனின் புகைப்படத்தையும் பாருங்கள்.:-
இரண்டுபேரின் முகத்தையும் ஒன்றாக ஆக்கியதால் வந்த புகைப்படம் கீழே:-
குளோனிங் மூலம் புதிய முகம் கிடைத்ததா..? இதுபோல் உங்கள் கற்பனையை உபயோகித்து என்ன வேண்டுமானாலும் செய்து பாருங்கள். பதிவின் நீளம் கருதி இத்துடன முடித்துக்கொள்கின்றேன்.
வாழ்க வளமுடன்.
வேலன்.
JUST FOR JOLLY PHOTOS:-
சீக்கிரம் பறந்து வா...கொஞ்ச தூரத்தில் அமெரிக்காவில் உள்ள அக்கா வீடு வந்துவிடும்.நமக்கு தேவையான உதவியை அக்கா செய்வார்கள்....
இன்றைய PSD டிசைன்புகைப்படம் கீழே:-
டிசைன் செய்தபின் வந்த புகைப்படம் கீழே:-
இதனை பதிவிறக்க இங்கு கிளிக் செய்யவும்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

வேலன்:-போட்டோஷாப் Clone Stamp Tool -ஐ பயன்படுத்த

போட்டோஷாப்பில் இன்று ஓன்பதாக உள்ள Clone Stamp Tool பற்றி பார்க்கலாம். இது ஒரு புகைப்படத்தில் ஒன்றுடன ஓன்று சேர்ப்பதற்கும் புதிய உருவத்தை உருவாக்குவதற்கும் இருக்கும் உருவத்தை இல்லாமல் செய்வதற்கும் பயன்படும். ஆக்கும் தொழிலையும் அழிக்கும் வேலையையும் அடையாளம் தெரியாமல் செய்யும் டூல் இது.நீங்கள் ஏதாவது ஒரு புகைப்படத்தை தேர்வு செய்து கொள்ளுங்கள்.பின்னர் டூல்கள் வரிசையில் ஒன்பதாக உள்ள இந்த டூலை தேர்வு செய்துகொள்ளுங்கள். இப்போது மேலே உங்களுக்கு பிரஷ் மெனு வரும் இதில் தேவையான அளவிற்கு பிரஷ் சைஸ் வைத்துக்கொள்ளுங்கள்.கீழே உள்ள படத்தை பாருங்கள்.
 அழகிய பார்க்கில் பெஞ்ச் ஒன்று உள்ளது. இப்போது இந்த பெஞ்ச் நமக்கு தேவையில்லையென்றால் சுலபமாக எடுத்து விடலாம். இப்போது நீங்கள் Clone Stamp Tool தேர்வு செய்துஉள்ளீர்கள் அல்லவா...கர்சரை இப்போது படத்திற்கு நடுவில் தரையில் கொண்டுவாருங்கள். உங்கள் கர்சரானது சிறிய வட்டத்துடன் உள்ளதா..இப்போழுது தேவையான இடத்தில் கர்சரை வைத்து Alt கீ யை அழுத்துங்கள். உங்கள் கர்சரின் வட்டமானது பெருக்கல் குறியுடன் வரும் .கர்சரை ஒரு கிளிக் செய்யுங்கள். இப்போழுது பெஞ்ச அருகே கர்சரை கொண்டு வாருங்கள். மெதுவாக பெஞ்ச மீது தேயுங்கள். பெஞ்ச் மறைந்து அந்த இடத்தில் உங்களுக்கு இலைகள் வருவதை காணலாம்.பெஞ்ச் அறிகுறியே இல்லாமல் செய்துவிடுங்கள்.கீழே உள்ள புகைப்படத்தை பாருஙகள்.
பெஞ்ச் இருந்த இடம் தெரியாமல் காலி செய்துவிட்டோமா..இப்போது அதைப்போல் உருவம் உருவாக்குவதை காணலாம். கீழே உள்ள படத்தை பாருங்கள்.
இப்போது இதைப்போல இன்னும் ஒரு பிம்பம் கொண்டுவர முன்பு சொன்னதுபோல் கர்சரால் உருவத்தின் ஏதாவது ஒரு இடத்தை தேர்வு செய்யுங்கள்.வேண்டிய இடத்தில் வைத்து கர்சரை கிளிக் செய்தவாறே படத்தில் தேயுங்கள்.படம் அழகாக வரும்.கீழே உள்ள படத்தை பாருங்கள்.
இதைப்போலவே ஒரு படத்தினுள் மற்றும் ஒரு படத்தையும் கொண்டுவரலாம். கீழே உள்ள படத்தை பாருங்கள்.
மிஸ்டர் பீன் படத்தை இதுபோல மாற்றிஉள்ளார்கள். நான் கூடுதல் எபெக்ட்டாக அவருக்கு நெற்றிக்கண் பொருத்தியுள்ளேன்.படத்தினை பாருங்கள்.
இந்த டூல் மூலம் வேறு என்னவெல்லாம் செய்யலாம் என அடுத்த பதிவில் காணலாம். பதிவின் நீளம் கருதி இத்துடன் முடித்துக்கொள்கின்றேன்.
அடுத்த பதிவு தமிழ் புத்தாண்டு அன்று. அன்று உங்களுக்கு ஒர் இன்ப அதிர்ச்சி இருக்கின்றது. புத்தாண்டு அன்று சந்திப்போம்.
வாழ்க வளமுடன்,
வேலன்.
JUST FOR JOLLY PHOTOS:-
ம்...கல்யாணத்திற்கு முன்னர்தான் நீ..பாதி நான் பாதி டைலாக் எல்லாம்.இப்போது எல்லாம் எனக்கு உணவை நீ கொடுக்கறதே இல்லை...
இன்றைய PSD புகைப்படம் கீ்ழே:-
Design செய்த பின் வந்த புகைப்படம் கீழே:-
இதனை பதிவிறக் க இங்கு கிளிக் செய்யவும். பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

வேலன்:-போட்டோஷாப் பிரஷ் டூலை இணைப்பது எப்படி?

சில வருடங்களுக்கு முன் சன்டிவியில் பிரபலமான ஒரு வசனம்:- இந்த வாரம் .......என்று பிரபலமானவர்களின் படங்களை போடுவார்கள். அதைப்போல் 
இந்த வாரம் போட்டோ ஷாப் வாரம்.போட்டோக்கள் வைத்து வெவ்வேறு சாப்ட்வேர்கள் மூலம் என்னவெல்லாம் செய்யலாம் என பார்க்கலாம். அதற்கு முன் போட்டோஷாப் பாடத்தை படித்துவிடலாம். 
போட்டோஷாப் பாடத்தில் பிரஷ் டூல் பற்றி பார்த்து வருகின்றோம். இன்றைய பாடத்தில் பிரஷ் டூலை எப்படி இணைத்து பயன்படுத்துவது என்று பார்க்கலாம். உங்களுக்காக இன்று இரண்டு பிரஷ் டூல்களை இணைத்துள்ளேன். 
முதல் பட்டாம்பூச்சி பிரஷ் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யவும்.
இரண்டாம் பட்டாம்பூச்சி பிரஷ் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யவும். இதனை பதிவிறக்கி உங்கள் கணிணியில் ஏதாவது ஒரு டிரைவில் வைத்துக்கொள்ளவும். பின்னர் போட்டோஷாப் பை திறந்து அதில் புதிய பைலை திறக்கவும். இப்போது பிரஷ் டூலை கிளிக் செய்யவும். (முந்தைய பாடம் தெரியாதவர்கள் இங்கு கிளிக் செய்து பாரத்துக்கொள்ளவும்.)
இப்போது உங்களுக்கு மேல்புறம் பிரஷ் தெரியும் . அதில் உள்ள சின்ன அம்புக்குறியை கிளிக் செய்யவும். உங்களுக்கு சின்ன விண்டோ ஒப்பன் ஆகும். அதில் உள்ள சின்ன அம்புக்குறியை கிளிக் செய்யவும். உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஒப்பன ஆகும். 


அதில் உள்ள Load Brushes என்பதனை கிளிக் செய்யவும. நீங்கள் டவுண்லோடு செய்த பிரஷ்ஷை தேர்வு செய்யவும்.இப்போது நீங்கள் டவுண்லோடு செய்த  பட்டர்பிளை பிரஷ் டூலானது இதில் வந்து அமர்ந்திருப்பதை காணலாம்.

இதில் மொத்தம் 30 பட்டர்பிளை மாடல்கள் உள்ளது. இதில் தேவையானதை தேர்வு செய்யவும்.இதில் உள்ள Master Diameter அளவினை மாற்றுவது மூலம் உங்கள் படத்தின அளவை வைத்துக்கொள்ளலாம். அதைப்போல் Foreground Color மாற்றுவது மூலம் வேண்டிய நிறங்களை கொண்டுவரலாம்.கீழே விதவிதமான பட்டாம் பூச்சிகள் பறப்பதை காணுங்கள்.

சாதாரண புகைப்படம் கீழே:-

அதில் பட்டாம் பூச்சி பறக்கவைப்பதை காணுங்கள்.
உதாரணத்திற்கு மற்றும் ஓரு படம் :-
உங்களுக்கு நிறைய பிரஷ் டூல்கள் இணையத்தில் உள்ளன. என்னிடமும் உள்ளது. தேவைப்பட்டால் சொல்லுங்கள்.4 Shared -ல் பதிவேற்றி லிங்க் தருகின்றேன்.போட்டோஷாப்பில் கற்பனை திறன் தான் அதிகம் தேவை.வேண்டிய பிரஷ் டூலை பயன் படுத்தி வேண்டிய டிசைன் கொண்டுவரலாம்.பதிவின் நீளம் கருதி இத்துடன் முடித்துக்கொள்கின்றேன்.சந்தேகம் இருப்பின் கேளுங்கள்.
வாழ்க வளமுடன்,
வேலன்.


JUST FOR JOLLY PHOTOS:-
எப்படி....சூப்பராக லேண்ட் ஆகிறோமா..?
இன்றைய் PSD புகைப்படம் கீழே:-
டிசைன் செய்தபின் வந்தபுகைப்படம் கீழே:-
இதனை பதிவிறக்க இங்கு கிளிக் செய்யவும். பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

பக்கங்கள்

பிரபலமான இடுகைகள்