வேலன்:-போட்டோஷாப் பாடம்-28 Polygonal Lasso Tool



போட்டாஷாப்பில் சென்ற பதிவில் Lasso Tool
பற்றி பார்த்தோம். இன்று Polygonal Lasso Tool பற்றி
பார்க்கலாம். இது மூன்றாவதாக உள்ள Lasso Tool-ல்
உள்ள உப டூல்ஆகும். Lasso Tool மூலம் படத்தை
சுற்றி மொத்தமாக தேர்வு செய்தால் இந்த
Polygonal Lasso Tool மூலம் ஒரு படத்தில் உள்ள
வளைந்துள்ள படத்தையே தேர்வு செய்யலாம்.
ஒரு கார் படம் இருக்கின்றது. அந்த காரை மட்டும்
தேர்வு செய்யவேண்டும். இந்த டூல் உபயோகப்படும்.
சரி இப்போது கீழே உள்ள படத்தை பாருங்கள்.

[7.jpg]

இப்போது Polygonal Lasso Tool தேர்வு செய்து கொள்ளுங்கள்.
இப்போது நான் கீழே உள்ள படத்தை தேர்வு செய்துள்ளேன்.


இப்போது இந்த பட்டாம்பூச்சியை தேர்வு செய்ய வேண்டும்.
இந்த டூல் மூலம் பட்டாம்பூச்சியை கட் செய்யுங்கள்.


ரைட் . இப்போது பட்டாம் பூச்சி நடுவில் வைத்து ரைட் கிளிக்
செய்யுங்கள். இப்போது உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ
ஓப்பன் ஆகும். அதில் உள்ள Select Inverse கிளிக் செய்யுங்கள்.
கீழே உள்ள படத்தை பாருங்கள்.

இப்போது படத்தை பாருங்கள். படத்தை சுற்றி உள்ள
இடங்களில் தேர்வு செய்துள்ளதை பாருங்கள்.


இப்போது டெலிட் கீ யை அழுத்துங்கள்.இப்போது உங்கள்
Backround Color -நடுவில் படம் தேர்வாகிஉள்ளதை பாருங்கள்.
கீழே உள்ள படத்தை பாருங்கள். பட்டாம் பூச்சி மட்டும்
தனியாக தேர்வாகிஉள்ளது. இதை வேண்டிய இடத்தில்
நாம் பொருத்திக்கொள்ளலாம்.


பதிவின் நீளம் கருதி இத்துடன் முடித்துக்கொள்கின்றேன்.
பதிவினை பாருங்கள். இரண்டு மூன்று முறை முயற்சி
செய்யுங்கள். சரியாக வரும்.

வாழ்க வளமுடன்,

வேலன்.






JUST FOR JOLLY PHOTOES:-


டேய் ...புடிடா...புடிடா...விட்டுவிடபோறே....


இன்றைய PSD புகைப்படம் கீழே:-



டிசைன் செய்தபின் வந்த படம் கீழே:-


இந்த படத்தை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.


போட்டோஷாப்பில் POLYGONAL LASSO TOOL பற்றி
இதுவரை அறிந்துகொண்டவர்கள்:-
web counter
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

வேலன்:-போட்டோஷாப் பாடம்-27 Lasso Tool

இன்று போட்டோஷாப்பில் Move Tool அடுத்துள்ள Lasso Tool
பற்றி பார்க்கலாம்.Marquee Tool செய்கின்ற வேலையை இது
செய்யும். என்ன ஒரு வித்தியாசம் எனில் Marquee Tool மூலம்
நாம் சதுரமாகவோ - வட்டமாகவோ தான் படத்தை தேர்வு
செய்யலாம். ஆனால் ஒரு படத்தில் வளைவு நெளிவுடன்
ஒரு பாகத்தை-படத்தை தேர்வு செய்ய இந்த டூல் உபயோகப்படும்.
முதலில் நீங்கள் ஒரு படத்தை தேர்வுசெய்து கொள்ளுங்கள்.
நான் கீழ்கண்ட படத்தை தேர்வு செய்துள்ளேன்.


இப்போது நீங்கள் Lasso Tool தேர்வு செய்து கொள்ளுங்கள்.
இது போட்டோஷாப்பில் மூன்றாவதாக
உள்ள டூல் ஆகும். கீழ்கண்ட படத்தை பாருங்கள்.

Lasso Tool -ஐ தேர்வு செய்துக்கொள்ளுங்கள்.இப்போது
படத்தை பாருங்கள்.இதில் உள்ள் ஒரு பறவையைமட்டும்
நான் தனியாக எடுத்துவிட போகின்றேன்.பறவையை
சுற்றி Lasso Tool மூலம் தேர்வு செய்துள்ளதை பாருங்கள்.


இப்போது Backround Color -ஐ கிளிக்
செய்ய உங்களுக்குColor Picker வரும். இப்போது கர்சரை
படத்தில் கொண்டு சென்று பறவையின் பின்புற கலரை
தேர்வு செய்து கொள்ளுங்கள்.இதுபற்றி மேலும் விவரம்
தேவைப்படுபவர்கள் முந்தைய பாடத்தை இங்குகிளிக்
செய்வதன் மூலம் தெரிந்துகொள்ளுங்கள்.
சரி பாடத்திற்கு வருவோம். இப்போது தேர்வு செய்த பறவையை
சுற்றி கோடு ஓடுவதை பாருங்கள். இப்போது டெலிட்
கீயை அழுத்துங்கள். பறவை மறைந்து அந்த இடம்
சாதாரணமாக மாறிவிட்டதை கவனியுங்கள்.
படம் கீ்ழே:-


அதைப்போலவே இந்த படத்தில் நீல வண்ணத்தை நாம்
எடுக்க வேண்டும்.


Lasso Tool மூலம் தேர்வு செய்யுங்கள்.


முன்பு சொன்னதுமாதிரி செய்யுங்கள். படம் கீ்ழே:-


அதைப்போலவே இந்த ஜோடிப்பறவைகளையும்:-


ஒரு பறவையைமட்டும் கட்செய்து


டெலிட் செய்தபின்வந்த படம் :-


ஜோடிப்பறவைகளை பிரித்தபாவம் நமக்கு வேண்டாம்
அதனால் மீண்டும் சேர்த்துவிடுவோம். படம் கீ்ழே:-



பதிவின் நீளம் கருதி பாடத்தை இத்துடன் முடித்துக்கொள்கி்ன்
றேன். இதன் தொடர்ச்சி அடுத்தபாடத்தில் பார்க்கலாம்.

வாழ்க வளமுடன்.

வேலன்.


ன்றைய PSD டிசைனுக்கான புகைப்படம்:-

டிசைன் செய்தபின் வந்த படம்:-

இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யுங்கள்.


போட்டோஷாப் பாடத்தில் Lasso Tool பற்றி இதுவரை
தெரிந்துகொண்டவர்கள்:-
web counter

பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

வேலன்:-போட்டோஷாப் பாடம்-26



போட்டோஷாப் இன்றைய பதிவில் மூவ் டூலின் மற்றும் ஒரு
உபயோகம் பற்றி பார்க்கலாம்.போட்டோஷாப்பில் மூவ்
டூலானது ஒவ்வொரு இடத்திலும்ஒவ்வொரு விதமாக
உபயோகிக்கலாம்.முந்தைய மூவ்டூலில
படத்தை ஒரு இடத்திலிருந்து மற்றும்ஒரு இடத்திற்கு
நகர்த்துவது பற்றி பார்த்தோம்.முந்தைய பாடம் பார்க்க
விரும்புபவர்கள் இங்குகிளிக் செய்யவும்.அதேபோல் லேயரில்
மூவ் டூல் உபயோகிப்பதை லேயர்பாடம் நடத்தும் சமயம்
விளக்குகின்றேன்.இன்றையபாடத்தில் மூவ் டூல் மூலம்
புகைப்படங்களை அதிகமாக்குவதுபற்றி பார்க்கலாம்.
முதலில் இந்த புகைப்படத்தை தேர்வுசெய்துள்ளேன்.
இதில் உள்ள குழந்தையின் முகம் மட்டும் கிராப்டூல் கொண்டு தேர்வு
செய்துள்ளேன்.

இப்போது குழந்தையின் முகம் மட்டும் தேர்வாகியுள்ளது.


இப்போது புதிய பைல் ஒன்றினை திறந்து கீழ்கண்ட அளவினை
கொடுத்துள்ளேன்.


புதிய விண்டோ ஓப்பன் செய்து மூவ் டூல் மூலம் புகைப்படத்தை
இதில் இடம் பெயர்ச்சி செய்துள்ளேன்.


புகைப்படத்தை நகர்த்திதேவையான இடத்தில் நிலைநிறுத்தியபின்
கீ-போர்ட்டில் உள்ள Alt Key அழுத்திக்கொண்டு கர்சர் மூலம்
புகைப்படத்தை வேண்டிய இடத்தில் நகர்த்திவைத்து கிளிக் செய்யுங்கள்.
பழைய புகைப்படத்தின் அருகிலேயே புதிய புகைப்படம் வருவதை
காணலாம்.இதேப்போல் புகைப்படத்தினை புதிய விண்டோமுழுவதும்
நகர்த்தி புகைப்படத்தை பதியலாம்.

இதே வசதியை முன்பு Pattern மூலம் செய்வதை பார்த்தோம்.
ஒரே செயலை போட்டோஷாப்பின் வெவ்வேறு டூல் மூலமும்
செய்ய முடியும் எனஇதன் மூலம் உணரலாம். பதிவின் நீளம் கருதி
இத்துடன்முடிக்கின்றேன்.

வாழ்க வளமுடன்,

வேலன்.


இன்றைய PSD பைலுக்கான புகைப்பட டிசைன்:-



டிசைன் செய்தபின் வரும் படம் கீழே:-


பதிவிறக்கம் செய்து கொள்ள இங்கு கிளிக் செய்யவும்:-

போட்டோஷாப் பாடம் 26 ஐ இதுவரை கற்றவர்கள்:-

web counter
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

வேலன்:-போட்டோஷாப் பாடம்-25 (செய்முறை பயிற்சி)



முன்பு பதிவிட்ட போட்டோ ஐ.டி.சுலபமாக என்கின்ற பதிவில்
நண்பர் திரு.அன்ரன் அவர்கள் கிழு்கண்டவாறு கேட்டிருந்தார். .
வணக்கம் வேலன் சார்.
உங்கள் பதிவுகள் அனைத்தும் அருமை.நான் உங்கள் நீண்ட
கால வாசகன்.சார் நீங்கள் இணைக்கும் PSD பைல்களின்
எவ்வாறு படங்களை இணைப்பது என்று தயவுசெய்து விளக்கமாக
கூறமுடியுமா?
என்றும் உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்.

நட்புடன் -- அன்ரன் ஜேர்மனியில் இருந்து

அவர் கேட்டுக்கொண்டதற்கு இணங்க
இன்று மீண்டும் PSD பைலில் எப்படி போட்டாக்களை இணைப்பது
என செய்முறை விளக்குகின்றேன்.
முதலில் இந்த PSD பைலை பதிவிறக்கம் செய்ய .
இஙகு கிளிக் செய்யுங்கள்
உங்களுக்கு கீழ்கண்ட புகைப்படம் ஓப்பன் ஆகும்..

"
இதன் மேல்புறம் உள்ள நீல கலர் பட்டியில் வைத்து இதன்
Image size பற்றி தெரிந்துகொள்ளுங்கள்.இதைப்பற்றி முந்தைய
பாடங்களில் விவரித்துள்ளேன்.உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ
ஓப்பன் ஆகும். இதில் உள்ள ரெசுலேசனை மட்டும் குறித்துக்
கொள்ளுங்கள்.

இப்போது தனியே நீங்கள் விரும்பும் புகைப்படத்தை பென்டூலால் கட் செய்து
அதன் ரெசுலேசன் 300 வருமாறு வைத்து தனியே சேமித்துக்
கொள்ளுங்கள். நான் கீழ்கண்ட இந்த தம்பதியரின் படத்தை
தேர்வு செய்துள்ளேன்.

இப்போது இதை மூவ் டூலால் நகர்த்தி PSD பைலில்
வேண்டிய இடத்தில் வையுங்கள்.உயரத்தையும்
அகலத்தையும் சரிசெய்ய டிரான்ஸ்பார்ம் டூல் கொண்டு
சரிசெய்யுங்கள். (இதைப்பற்றியும் முன்பு சொல்லியுள்ளேன்)
Ctrl+T பற்றி இப்போது ஞாபகம் வரும் என் நினைக்கின்றேன்.


சரி செய்தபின் வந்த படம் கீழே கொடுத்துள்ளேன்.

இனி மணப்பெண் படத்தை மட்டும் தனியே எடுத்துள்ளேன்.


இப்போது நீங்கள் படத்தை இதைப்போல் வைத்துக்
கொள்ளுங்கள். உயரம் - அகலம் முன்பு சொன்னது போல்
டிரான்ஸ்பார்ம் டூல் கொண்டு சரி செய்யுங்கள்.

சரி செய்தபின் வந்த படம் கீழே:-


இந்த டிசைனில் உள்ள ரோஜப்பூ - பட்டாம்பூச்சி - மஞ்சள் நிற
பூ - Sweet Dreams - என எதை வேண்டுமானாலும் நீங்கள் தனியே
பிரித்து எடுத்து அதை தனி லேயராக மாற்றி தனியே டிசைன்
உருவாக்கலாம். அதற்கு நீங்கள் F7 -ஐ அழுத்துங்கள். உங்களுக்கு
கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.



இதில வேண்டிய லேயரை தேர்வு செய்து மூவ் டூலால்நகர்த்தி
புதிய விண்டோவினில் விட்டால் உங்களுக்கு புதிய
லேயருடன் படம் உருவாகும்.பலமுறை முயற்சி செய்யுங்கள்.
புகைப்படம் சுலபமாக வந்துவிடும்.
தொழில்நுட்ப பதிவர் இடையே வாக்கு பெட்டி
வைத்துள்ளனர். உங்களுக்கு விருப்பம் இருந்தால் ஓட்டுப்
போடுங்கள். ஒட்டுப்போட இங்கு கிளிக் செய்யவும்.


வாழ்க வளமுடன்.

வேலன்.



Just for Jolly Photos:-

இதுதான் புள்ளையே கண்ணுக்குள்ளே வைச்சி காப்பத்தறதோ!


இதுவரை டிசைன் போட்டோவை உபயோகித்தவர்கள்:-
web counter

பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

பக்கங்கள்

பிரபலமான இடுகைகள்