வேலன்:-போட்டோஷாப் பாடம்-22(கலர்படத்தை நொடியில் கருப்பு வெள்ளையாக்க)




போட்டோஷாப்பில் இன்று கலர் புகைப்படத்தை நொடியில்
கருப்பு வெள்ளை புகைப்படமாக மாற்றுவது பற்றி பார்க்கலாம்.
உங்களுக்கு தேவையான புகைப்படத்தை தேர்வு செய்து
கொள்ளுங்கள்.

இப்போது Ctrl+Shift+U கீகளை ஒரு சேர அழுத்துங்கள். உங்களது
படம் மானது கருப்பு வெள்ளையாக மாறிவிடும்.



சரி படத்தை பாதி வெள்ளை மீதி கலர் வேண்டும் என்ன செய்வது?
மீண்டும் படத்தை தேர்வு செய்யுங்கள்.

படத்தை மார்க்யு டூலால் நடு மையம் வரை தேர்வு செய்யுங்கள்.
Feather Tool -கொண்டு வேண்டிய ரேடியஸ் அளவினை கொடுத்து
ஓகே செய்யுங்கள். இப்போது முன்பு சொன்னது போலவே
Ctrl+Shift+U அழுத்துங்கள். நீங்கள் தேர்வு செய்த பாகம் மட்டும்
கருப்பு வெள்ளையாக மாறி விடுவதை பார்க்கலாம்.

இன்றைய டிசைனில் கீழ்கண்ட PSD புகைப்பட பைலை
இணைத்துள்ளேன்.

கீழ்கண்ட புகைப்படத்தை பாருங்கள்.

இதில் புகைப்படத்தை கட்செய்து கீழ்கண்டவாறு இணைத்துள்ளேன்.

அவ்வாறே கீழ்கண்ட புகைப்படமும்.


மேற்கண்ட PSD FIle தேவைப்படுவர்கள் கீழ்கண்ட லிங்க்

கிளிக்
செய்து பதிவிறக்கம் செய்து கொள்ளவும்.

பதிவினை பாருங்கள்.பயிற்சியினை மேற்கொள்ளுங்கள்.

வாழ்க வளமுடன்,

வேலன்.

கலர்படத்தை கருப்புவெள்ளையாக மாற்றியவர்கள்:-

web counter

JUST FOR JOLLY PHOTOS:-
இணைய நண்பர் அனுப்பிய புகைப்படம்.


பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

வேலன்:-போட்டோஷாப் பாடம்-21



போட்டோஷாப்பில் இன்று சாதாரண போட்டோவில் எப்படி டிசைன்
களை சேர்த்து அழகாகமாற்றுவது என பார்க்கலாம்.

இப்போது டிசைன்செய்து மாற்றிய போட்டாவை பாருங்கள்.
எவ்வளவு அழகாக மாறி உள்ளது.


இன்றைய பாடத்தில் இதை எவ்வாறு செய்வது என பர்ர்க்கலாம்.
முதலில் இந்த லிங்க் கிளிக் செய்து இந்த PSD பைலை டவுண்லோடு
செய்து கொள்ளவும்.( நமது வாசகர்கள் வசதிக்காக இதை விண்ரேர்
மூலம் சுருக்கி பதிவேற்றியுள்ளேன். விண்ரேர் பைலை எப்படி
விரிவாக்குவது என ஏற்கனவே பதிவிட்டுள்ளேன்).
இங்கு PSD பைலை பற்றி சொல்லவேண்டும். பல லேயர்கள்
சேர்ந்து உருவாக்குவது தான் PSD பைல். இதில் உள்ள லேயரை
கிளிக் செய்து டிலிட் செய்தாலோ - மூவ் டூல் கொண்டு மூவ்
செய்தாலோஅந்த குறிப்பிட்ட லேயரில் உள்ள படம் மறைவதோ
-மூவ் ஆகவோ செய்யும். இப்போது இந்த் பைலை போட்டோ
ஷாப்பில் திறந்து கொளளுங்கள். உங்களுக்கு மீண்டும் இந்த
படம் ஓப்பன் ஆகும்.இதில் மொத்தம் 25 டிசைன்கள் உள்ளது
என்றால் உங்களால் நம்ப முடிகின்றதா? ஆனால் அதுதான்
உண்மை. இதில் உள்ள ஒவ்வொரு டிசைனையும் நம்மால்
நீக்கவோ - மற்றொரு படத்தில் சேர்க்கவோ முடியும்.
இப்போது நீங்கள் F7 கீ-யை அழுத்துக்கள்.உங்களுக்கு
கீழ்கண்டவிண்டோ ஓப்பன் ஆகும்.

இதில் உள்ள ஓவ்வோரு டிசைனும் ஓரு லேயர் ஆகும்.
இப்போது நாம் இந்த டிசைன்போலவே இன்னும் ஒரு டிசைன்
உருவாக்குவதை காணலாம். முதலில் உள்ள போட்டோவின்
அளவிற்கு ஒரு விண்டோ ஓப்பன் செய்து கொள்ளுங்கள்.
இதை ஓ,கே. கொடுக்க உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன்
ஆகும்.

உங்களுக்கு வெள்ளைநிற விண்டோஓப்பன் ஆகியதா. இப்போது
F7 அழுத்தியதில் வந்த விண்டோவில் கடைசியாக உள்ள Layer 8
கிளிக் செய்யுங்கள். அந்த லேயரானது நீல நிறமாக மாறிவிடும்.
இப்போது மூவ் டூல் கிளிக் செய்யுங்கள். உங்கள் கர்சரை கொண்டு
வந்து படத்தின் மீது வைத்து கிளிக் செய்து கர்சரை இழுத்துவந்து
புதிய விண்டோவில் விடுங்கள். இப்போது கீழ்கண்ட விண்டோவை
பாருங்கள்.

மீண்டும் layer 0 கிளிக் செய்யுங்கள். முன்பு சொன்னது மாதிரியே
செய்யுங்கள். அந்த டிசைனை இழுத்துவந்து இந்த விண்டொவில்
விட்டுவிடுங்கள்.

இவ்வாறே நீங்கள் ஓவ்வொரு லேயராக இழுத்துவந்து உங்கள்
புதிய விண்டோவில் சேர்த்துக்கொண்டோ இருங்கள்.

கீழ்கண்ட படத்தில் சிறிய சிகப்பு புள்ளிகளை சேர்த்துள்ளேன். அதற்கான
லேயர் small red mork என குறிப்பிட்டுள்ளேன்.
இந்த படத்தில் ஓரத்தில் பூ டிசைன் லேயரை சேர்த்துள்ளேன்.
அதற்கான லேயர் Green Leaves என குறிப்பிட்டுள்ளேன்.
அதைப்போல் பச்சை பூக்களுக்கு எதிர் புறம் பார்டர் சேர்த்துள்ளேன்.
இப்போது தம்பதியரை எடுத்துவந்து சேர்த்துள்ளேன். இந்த இடத்தில்
நீங்கள் உங்கள் போட்டோவை சேர்க்கலாம். போட்டோவை
பென்டூலால் கட் செய்து எப்படி எடுத்துவருவது என முன்னர்
பதிவிட்டுள்ளேன்.இப்போது பெயரை சேர்த்துள்ளேன்.
இங்கு நீங்கள் உங்கள் பெயரைசேர்த்துக்கொள்ளலாம்.


இப்போது இரண்டு இதயங்களை கொண்டுவந்து சேர்த்துள்ளேன்.
இதை லேயரில் two red hearts என பெயர் சூட்டியுள்ளேன்.
இப்போது அழகான மனைவி அன்பானதுணைவி என்கின்ற வரியை
சேர்த்துள்ளேன்.


இப்போது அமைந்தாலே பேரின்பமே என்கின்ற வரியையும்
சிகப்பு குடை மற்றும் பெயரையும் சேர்த்துள்ளேன்.


இப்போது Wedding Day என்கின்ற வரியையும் நீல நிற குடையையும்
சேர்த்துள்ளேன்.


இந்த நீல நிறம் மற்றும் சிகப்பு நிற குடையை எனது பிளாக்கின்
தலைப்பின் ஓரத்தில் நீங்கள் காணலாம்.


நீங்கள் F7 அழுத்தி வரும் லேயரில் பார்த்தால் உங்களுக்கு
லேயரின் முன்பும் கண் ஒன்று தெரியும்.அதில் உள்ள
கண்ணை நீங்கள் கிளிக் செய்து பாருங்கள்.உங்கள் படத்தில்
உள்ள அந்த லேயர் படம் மறைவதைகாணலாம்.
பதிவின் நீளம் கருதி பாடத்தை இத்துடன் முடிக்கின்றேன்.
இதைப்போல் என்னிடம் சுமார் 200க்கும் மேல் டிசைன்கள்
உள்ளது. இன்று பதிவிட்டது ஒரு டிசைன்தான் .
உங்களுக்காக இனி பதிவுகளில் ஒவ்வொரு டிசைனின் லிங்க்
கொடுத்துவருகின்றேன்.பத்து அல்லது பன்னிரண்டு
டிசைன் சேர்ந்ததும் நீங்கள்அதை ஒரு சிடியில் காப்பி
செய்து வைத்துக்கொள்ளுங்கள்.ஒவ்வொரு டிசைனிலிருந்தும்
ஒரு லேயரை எடுத்து நாமேதனியாக டிசைன் செய்யலாம்.
இந்த லேயரை பற்றி சொல்லவே இன்றைய பாடம்.போட்டோ
ஷாப்பில் உள்ள டூல்கள் பற்றி பாடம் தொடர்ந்துவரும்.


பதிவுகளை பாருங்கள். பிடித்திருந்தால் மறக்காமல் ஓட்டுப்
போடுங்கள்.

வாழ்க வளமுடன்,

வேலன்.

போட்டோஷாப் டிசைன் இதுவரை செய்தவர்கள்:-
web counter

JUST FOR JOLLY PHOTOS

மனிதர்களுக்கு பன்றிக்காய்ச்சல் வராமலிருக்க நீங்கள் மாஸ்க்
போட்டுக்கொள்கின்றீர்கள். எங்களுக்கு மனிதர்கள்
காய்ச்சல் வராமலிருக்க நாங்களும் மாஸ்க் போட்டுக்
கொள்கின்றோம்.

பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

வேலன்:-போட்டோஷாப் பாடம்-20(Stroke Tool)



போட்டோஷாப்பில் இன்று Storke பற்றி பார்க்கலாம். ஒரு படத்தினை
சுற்றி அழகான கலரில் பார்டர் இதில் செய்யலாம். அதைப்பற்றி இன்றைய
பாடத்தில் காணலாம்.முதலில் இந்த ரோஜாப் பூவினை எடுத்து உள்ளேன்.


இப்போது இந்த பூவினை சுற்றி மார்க்யு டூலால் செவ்வகம்
வரைந்துள்ளேன். படத்தினை பாருங்கள்.


இப்போது நீங்கள் மவுஸில் ரைட் கிளிக் செய்ய உங்களுக்கு
கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.அதில் உள்ள
Feather உங்களுக்கு தேவையான Radius வைத்துக்கொள்ளுங்கள்.
ஓ.கே. கொடுங்கள்.


வழக்கப்படி Ctrl+C - Ctrl+N-Enter -Ctrl+V செய்யுங்கள். உங்களுக்கு
கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.



இப்போது பூவினை சுற்றி மார்க்யு டூலால் ஓரத்தில் செவ்வகம்
வரையுங்கள். அடுத்து Edit -கிளிக் செய்து அதில் உள்ள Stroke
கிளிக் செய்யுங்கள். உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன்
ஆகும்.

இதில் Width உங்களுக்கு எந்த பிக்ஸல் அளவிற்கு வேண்டுமோ
அதை தட்டச்சு செய்யுங்கள்.அதன் கீழே உள்ள கலர் பாக்ஸில்
நீங்கள் கிளிக் செய்ய உங்களுக்கு கலர் பிக்கர் -Color Picker -வரும்.
உங்களுக்கு தேவையான நிறத்தினை தேர்ந்தெடுங்கள். நான் சிகப்பு
கலரினை தேர்வு செய்துள்ளேன்.
அடுத்துள்ளது நீங்கள் தேர்வு செய்த கட்டத்திற்கு உள்புறம் - நடுவில்-
வெளிப்புறம் - இதில் எங்கு கலர் கோடு வரவேண்டுமோ -inside-
center-out side -இதில் எது வேண்டுமோ அதை
தேர்வு செய்யுங்கள். கீழே உள்ள படத்தினை பாருஙகள்.

இப்போது சிகப்பு கலரின் முன் அதைப்போல் மார்க்யு டூலால்
செவ்வகம் வரையுங்கள். முன்பு போல் செய்யுங்கள்.

நான் பச்சை கலரை கொடுத்துள்ளேன். கீழே உள்ள படத்தை
பாருங்கள்.

தனியே பார்டர் போடுவது பார்த்தோம். ஆனால் படத்தை சுற்றியே
கோடு வருவது பற்றி பார்க்கலாம். நான் திரிஷா அவர்களின் படத்தை
எடுத்துக்கொண்டுள்ளேன்.

பென்டூல் மூலம் அவரை சுற்றி கட் செய்தேன். படத்தை தனியே
காப்பி செய்தேன். கீழே உள்ள படத்தை பாருங்கள்.


இப்போது முன்பு சொல்லிகொடுத்தது மாதிரியே செய்யுங்கள்.
கீழே உள்ள படத்தினை பாருங்கள.



இப்போது அடுத்துள்ள படத்தினை பாருங்கள். பச்சை நிறத்தினை
அடுத்து மஞ்சள் நிறம் தேர்வு செய்துள்ளேன்.


அடுத்துள்ள படத்தினை பாருங்கள். சிகப்பு நிறம் தேர்வு செய்து
உள்ளேன். கீழே உள்ள படத்தினை பாருங்கள்.


இவ்வாறு தேர்வு செய்த படத்தினை சுற்றிலும் கூட நாம்
மார்க்யு டூலில் உள்ள நீள்வட்டமும் தேர்வு செய்யலாம். டிசைன்
செய்துள்ள படத்தினை பாருங்கள்.

அதைப்போல் கூட்டத்தில் உள்ள ஒருவரை தனியே அடையாளம்
காண்பிக்கலாம். கீழே உள்ள படத்தினை பாருங்கள்.




நண்பர் ஒருவரின் திருமண படம். இதில் எனது மகனை அடையாளம்
காண்பதற்காக அவரை சுற்றி பச்சை நிற கோடு போட்டுள்ளேன்.
கீழே உள்ள படத்தினை பாருங்கள்.

அடுத்த போட்டோஷாப் பாடத்தில் இருந்து உங்களுக்கு ஒர்
இன்ப அதிர்ச்சி காத்திருக்கின்றது... ...அதுவரை இன்றைய பதிவினை
பாருங்கள். பிடித்திருந்தால் மறக்கமால் ஓட்டுப்போடுங்கள்.

வாழ்க வளமுடன்,

வேலன்.

போட்டோஷாப்பில் Stroke பற்றி இதுவரை படித்தவர்கள்:-
web counter

JUST FOR JOLLY PHOTOES:-



http://groups.yahoo.com/group/babes_in_blue/

இந்த படத்தை ஜாலியாக எடுக்க வேண்டாம். சீரிஸாகவே பாருங்கள்.
புகைப்பழக்கத்தை விட்டால் மகிழ்ச்சியே...
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

வேலன்:-போட்டோஷாப் பாடம் -19





போட்டோஷாப்பில் இன்று Duplicate,Image Size,Canvas Size,File info
மற்றும் Page Setup பற்றி பார்க்கலாம். முந்தைய போட்டோஷாப்
பாடம்- 4 ல் Image பற்றி பார்த்தோம். அதில் நாம் மெனுபார் சென்று
அங்கு Image -ல் Duplicate,Image Size,Canvas Size உபயோகிப்பதை
பற்றி பார்த்தோம். ஆனால் அங்கு செல்லாமலே நாம் சுலபமாக
மற்றும் ஓரு வழியில் மேற்கண்ட கட்டளைகளை செய்வதை இங்கு
பார்க்கலாம்.

முதலில் ஒரு படத்தை தேர்வுசெய்து கொள்ளுங்கள்.நான் ஐஸ்வர்யா
ராய் அவர்களின் படத்தை எடுத்துள்ளேன். அதில் படத்தின் மேல்புறம்
உள்ள புளு பட்டையின் மேல் கர்சரை வைத்து கிளிக் செய்ய உங்களுக்கு
கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.

அதில் உள்ள Duplicate கிளிக் செய்யுங்கள். உங்களுக்கு கீழ்கண்ட
விண்டோ ஓப்பன் ஆகும்.

ஓகே கொடுங்கள். உங்களுக்கு கீழ்கண்ட விண்டோக்கள்
இரண்டு தோன்றுவதை பாருங்கள்.

அடுத்துள்ளது Image Size தேர்வு செய்யுங்கள்.

உங்களுக்கு தேவையான அளவினை இங்கு தேர்ந்தேடுத்துக்
கொள்ளுங்கள். ஓகே கொடுத்தால் நீங்கள் விரும்பிய அளவினை
பெறலாம்.

அடுத்துள்ளது Canvas Size. கீழே உள்ள விண்டோவினை பாருங்கள்.

இதனை தேர்வு செய்ய உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.


உங்கள் படத்தின் அளவினை Current Size-ல் பார்க்கலாம்.
New Size-ல்நமக்கு வேண்டிய அளவினை கொடுத்துப்
பெறலாம்.இதில் Anchorபார்த்தால் அதில் ஓன்பது
கட்டங்கள் இருக்கும்.சுற்றிலும் அம்புக்குறியும்நடுவில்
வெண்மை நிறமும் இருக்கும்.உங்கள் கர்சரை எந்த
அம்புக்குறியில் நீ்ங்கள் கிளிக் செய்கின்றீர்களோ
அந்த இடம்வெள்ளை நிறத்தையும் அநத இடத்தை
சுற்றி அம்புக்குறிஅமைவதையும்காணலாம்.

இப்போது உங்களுக்கு தேவையான அளவினை நீயு
சைஸ்ஸில்நீள -அகலத்துடன் குறிப்பிடுங்கள்.
(உங்கள் படத்தினை ஓன்பது பாகங்களாக
பிரித்து அதில் எந்த இடம் உங்களுக்கு வேண்டுமோ
அந்த இடத்தைநீங்கள் தேர்வு செய்து கொள்ளுங்கள்)
நான் இந்த படத்தில் ஐஸ்வர்யாஅவர்களின் கண்களை
தேர்வு செய்வதற்காக (ஐஸ் அவர்களின் ஐஸ்)
அகலம் 5 அங்குலம் உயரம் 1.5 அங்குலமும் வைத்துள்ளேன்.
கீழேஉள்ள விண்டோவினை பாருங்கள்.


ஓகே கொடுங்கள். உங்களுக்கு கீழ் கண்ட விண்டொ தோன்றும்.
Proceed கொடுங்கள். கீழே தோன்றும் படத்தை பாருங்கள்.


ஓ.கே. கொடுங்கள். உங்களுக்கு கீழ்கண்ட விண்டொ தோன்றும்.


இதைப்போல் உங்களுக்கு தேவையான இடத்தை தேர்வு
செய்யுங்கள்.இந்த கட்டளையை நாம் Crop Tool மூலமும்
செய்யலாம்.அதைபின் வரும் பாடங்களில் பார்க்கலாம்.
கடைசியாக உள்ளது Page Setup. அதை தேர்வு செய்யுங்கள்.

உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். இதில் உங்கள்
பேப்பரின் அளவினையும் போட்டோவானது நீளவாக்கிலா அல்லது
அகலவாக்கினில் தேவையா என்பதையும் தேர்வு செய்யுங்கள்.

இதில் உள்ள பிரிண்டரை தேர்வு செய்யுங்கள். உங்களுக்கு கீழ்கண்ட
விண்டோ ஓப்பன் ஆகும்.
உங்கள் பிரிண்டர் பெயரையும் அளவினை செட் செய்து ஓகே
கொடுங்கள்.பிரிண்டர் இணைப்பு கொடுத்திருந்தால் உங்களுக்கு
நீங்கள் தேர்வு செய்தபடம் ஆனது பிரிண்ட் ஆகும். இதே கட்டளையை
நாம் மெனுபாரில் உள்ளபைல் மூலமும் நிறைவேற்றலாம்.
அதனையும் நாம் பின் வரும் பாடங்களில்பார்க்கலாம்.

பதிவின் நீளம் கருதி பாடத்தினை இத்துடன் முடித்துக்கொள்கின்றேன்.
பாடங்களை பாருங்கள். பிடித்திருந்தால் ஓட்டுப்போடுங்கள்.

வாழ்க வளமுடன்,

வேலன்.

JUST FOR JOLLY PHOTOES



போட்டோஷாப் பாடம் -19 படித்தவர்கள் இதுவரை:-
web counter
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

பக்கங்கள்

பிரபலமான இடுகைகள்