போட்டோஷாப் அடிப்படை பாடங்கள்-7 COVER DESIGN

போட்டோஷாப் அடிப்படை பாடங்கள்-7
COVER DESIGN





போட்டோஷாப்பில் இதுவரையில் 6 பாடங்கள்

வரை பார்த்தோம். முன்பதிவுகளை பார்க்காதவர்

கள் இங்கு சென்று பார்க்கவும்.

இதுவரை பாடங்கள் பார்த்தோம். சரி இதில் எதாவது

செய்ய முடியுமா ? என நண்பர் கேட்டார். அவருக்காக

இதுவரை பார்த்ததிலிருந்து ஒரு சின்ன பயன்பாட்டினை

பார்க்கலாம்.

முதலில் போட்டோஷாப் ஓப்பன் செய்து கொள்ளுங்கள்.

அதில் File - New ( பைல் - நியூ )தேர்ந்தெடுங்கள். 





இதில் நான் கவரின் அளவை கீழ்கண்டவாறு

தேர்வு செய்துள்ளேன்.


இதில் Name என்பதின் எதிரில் கவர்

என் பெயர் கொடுத்துக்கொள்ளுங்கள். அதில்

Width என்பதின் எதிரில் 10 அங்குலம்

(10 inch) எனவும், Hight என்பதின் எதிரில்

4.5 அங்குலம் (4.5 inch ) எனவும் அளவை

தேர்வு செய்து கொள்ளவும். Resulation அளவு

200 - 300 வரை விருப்பபடி அமைத்துக்கொள்

ளுங்கள். பின் ஓகே கொடுத்து வெளியேறுங்கள்.

இப்போது உங்களுக்கு கீழ்கண்டவாறு ஒரு

வெற்று கவர் உருவாகும். 





சரி . கவர் ரெடி செய்துவிட்டோம். இனி அதில் படம்

சேர்ப்பது எப்படி என பார்க்கலாம். உங்கள் கணிணியில்

உள்ள படத்தை Open மூலம் தேர்வு செய்யுங்கள். 

நான் இந்த படத்தை தேர்வு செய்துள்ளேன்.


இதில் முகத்தை மட்டும் நாம் முன்பு பார்த்த மார்யூ டூலால்

தேர்வு செய்து அதில் Feather அளவு 30 வைத்துகொள்ளுங்கள்.

மார்யூ டூல் மற்றும் Feather Tool பற்றி தெரியாதவர்கள்

முன்பாடங்களை பார்த்துக்கொள்ளவும்.

அதை செல்கட் செய்து காப்பி பின் நமது கவரை

தேர்வு செய்து அதில் பெஸ்ட் செய்யவும். உங்கள்

படம் ஆனது கவரில் நடுவில் பெஸ்ட் செய்யப்பட்டு

இருக்கும். பின் மார்க்யூ டூலுக்கு அடுத்துள்ள

மூவ் டூல் ( டூல்களின் முதல் வரிசையில் அடுத்து

உள்ள டூல் ஆகும் இது. வரும் பாடங்களில் இதை

பார்க்கலாம். அவசரத்துக்கு இப்போது அதை 

உபயோகித்துக்கொள்ளலாம்) கர்சரால் தேர்வு

செய்துகொண்டு படத்தை நகர்த்தினால் படம்

நமது மவுஸ்க்கு எற்றவாறு நகரும். அதை

இடது (நமது) மூலைக்கு கொண்டு வரவும்.படத்தை

பாருங்கள்.


அடுத்து உங்கள் முகவரியை அதில் தட்டச்சு

செய்யுங்கள். தட்டச்சு தெரியாதவர்கள் எனது

முன்பதிவை பார்க்கவும். அதை இந்த

கவரில் பேஸ்ட் செய்யவும். இங்கு ஒரு

சின்ன விவரம் நாம் பார்க்க வேண்டும். நாம்

முகவரியை அப்படியே பேஸ்ட் செய்தால்

போட்டோஷாப் அதை ஏற்றுக்கொள்ளாது. அதனால்

போட்டோஷாப்பில் உள்ள டூல்களின் வரிசையில

8 - வரிசை  2- வது டூல் கிளிக் செய்யுங்கள்.(T என 

ஆங்கில எழுத்தில் போட்டிருக்கும்). இப்போது

உங்கள் முகவரி இதில் பேஸ்ட் ஆகிவிடும். அதை

உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப வரிகளை திருத்திக்

கொள்ளுங்கள்.


அனுப்புனர்(From Address) முகவரி ரெடி. இப்போது

பெறுநர் (To Address ) பார்ப்போம். மீண்டும் File -

Open -சென்று அனுப்பவிரும்புகிறவரின் புகைப்

படத்தை தேர்வு செய்யுங்கள்.முன்பு கூறியபடி

மார்யூ டூலால் படத்தை இதில் பேஸ்ட் செய்யுங்கள்.

உங்களுக்கு இந்த மாதிரியாக படம் கிடைக்கும்.




பெறுநர் முகவரியில் அவர் பெயரை தட்டச்சு செய்து

அதை முன்பு கூறியபடி பேஸ்ட் செய்துவிடுங்கள்.

உங்களுக்கு இந்த மாதிரியாக படம் கிடைக்கும்.



உங்களுக்கு கவர் ரெடி. அதை பிரிண்ட் எடுத்துக்

கொள்ளுங்கள். இதை நண்பர் - உறவினர் ஆகிய

வர்களுக்கு அனுப்பினால் அவர்கள் மனம் மிக

மகிழ்ச்சி அடையும். அனுப்பிய நபரை உடனே

தெரிந்துகொள்வதுடன் போஸ்ட்மேனும் உரிய

நபரிடம் பத்திரமாக கடிதத்தை சேர்த்துவிடுவார்.

பதிவை படித்துப்பாருங்கள்.

பிடித்திருந்தால் மறக்காமல் ஓட்டுப்போடுங்கள்.

வாழ்க வளமுடன்,

வேலன்.

JUST FOR JOLLY PHOTOES



வலைப்பூவில் உதிரிப்பூக்கள்

போட்டோ ஷாப்.

RED,GREEN,BLUE ஆகியவற்றின் 0 Shadow

களை சேர்த்தால் நமக்கு கருப்பு நிறமும்,

மூன்று கலர்களின் 255 Shadow களையும் 

சேர்த்தால் வெள்ளை நிறமும் கிடைக்கும்.


hits counter


web counter

பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

போட்டோஷாப் பாடங்கள்-6(FREE TRANSFORM TOOL)

போட்டோஷாப் பாடங்கள் -6

(FREE TRANSFORM TOOL)


போட்டோஷாப் பாடங்கள் -6

நாம் இதுவரை போட்டோஷாப் பாடம் 5 வரையிலும்

அதில் மார்க்யூ டூலில் உள்ள Free Transform பற்றியும்

பார்த்துவருகின்றோம். இதுவரை பாடங்கள் பார்க்காத

வர்களுக்காக கடந்த 5 பாடங்களின் இணைப்பை இங்கு

பதிவிட்டுள்ளேன்.

பாடம்-1 பாடம்-2 பாடம்-3 பாடம்-4 பாடம்-5


இன்று மாடலுக்காக மகாபலிபுரம் கடற்கரை கோயிலை

எடுத்துள்ளேன்.இதில் முதலில் மார்க்யூ டூலால் செல்க்ட்

செய்யவும். பின் மவுஸ் மூலம் ரைட் கிளிக் செய்யவும்.

அதில் Free Transform Tool செல்க்ட் செய்யுங்கள்.

Free Transform Tool -ல் நாம் அதனுடைய உப டூல்களை

பயன்படுத்தாமல் படத்தை வேண்டிய பயன் பாட்டுகளுக்கு

சுருக்கிக்கொள்ளலாம். இந்த படத்தில் Free Transform

Tool மட்டும் பயன்படுத்தி படத்தின் மூலையில் உள்ள

சதுரத்தில் கர்சரை தள்ள படமானது வலமிருந்து இடமாக

சுருங்குவதை பாருங்கள்.



இந்தப்படத்தை பாருங்கள். இதில் நடுவில் உள்ள சதுரத்தில்

கர்சரை வைத்து தள்ள படமானது வலப்புறம் இருந்து இடப்புறம்

செல்வதைக்காணலாம்.



இதைப்போலவே படமானது கீழிருந்து மேல்நோக்கி

செல்வதை பாருங்கள்.


இதைப்போலவே படங்களை மேலிருந்து கீழாகவும்

இடமிருந்து வலமாகவும் மாற்றலாம்.



இந்த டூல்களின்பயன்பாடுகளை நினைவில் வைத்துக்

கொள்ளுங்கள்.பின்னர் போட்டோஷாப்பில் பணி

புரிகையில் நமக்கு உபயோகப்படும்.

சரி பாடத்திற்கு வருவோம். நீங்கள் படத்தை

தேர்வுசெய்து மார்க்யூ டூலால் செலக்ட் செய்தபின்

உங்களுக்கு வழக்கபடி Transform Tool -ல் உள்ள அனைத்து

டூல்களும் தெரியவரும் . அதில் சென்றவாரம் நாம்

Scale Tool பற்றி பார்த்தோம். இனி அடுத்து உள்ள Rotate

Tool பற்றி பார்ப்போம். இனி Scale Tool க்கு அடுத்துள்ள

Rotate Tool செலக்ட் செய்யுங்கள்.


உங்களுக்கு முன்பு பார்த்தமாதிரி படத்தை சுற்றிலும்

கோடுகளும் - சிறிய சதுரங்களும் கிடைக்கும்.

இப் போது கர்சரை அங்கு எடுததுச்சென்றால்

கர்சரானது வளைந்த அம்புக்குறியுடன் தோன்றும்.

இனி நீங்கள் படத்தை உங்களுக்கு வேண்டிய அளவில்

திருப்பிக் கொள்ளலாம்.(படமானது வண்டியின்

ஸ்டேரிங் மாதிரி திருப்புவதை காணலாம்)



அடுத்து உள்ள Tool - Skew ஆகும். அதை யும் வழக்கபடி

தேர்வுசெய்து கொள்ளுங்கள்.


Skew Tool ஆனது படங்களை விருப்பபடி சாய்துக்

கொள்வதற்கு பயன் படுகின்றது. படத்தை பாருங்கள்.


இதில் மூலையில் உள்ள சதுரத்தை நீங்கள்

கர்சரால் இழுக்கையில் கர்சரானது நீங்கள் படுக்கை

வாட்டத்தில் இழுத்தால் படுக்கை வாட்டத்திலும்

(Horizontal) ,உயர வாட்டத்தில் இழுத்தால் உயர

வாட்டத்திலும் (Vertical) படம் நகரும். ஆனால்

நீங்கள் இழுக்கும் சதுர மூலைமட்டுமே நகரும்.

மற்ற பக்கங்கள் நகராது.

அடுத்து உள்ள து Distort Tool. இதன் உபயோகம் பற்றி

பார்ப்போம்.


இது படத்தை நான்கு மூலைகளிலும் இருந்து

இழுத்து சிறப்பு தோற்றங்களை உருவாக்கலாம்.

கோட்டிற்கு வெளியில் செல்லும் போது படமானது

விரிவாகவும் கோட்டிற்கு உள்செல்லும்போது

படமானது சுருங்கியும் வரும்.



மூலையில் உள்ள சதுரத்தை நாம் கர்சரால்

இழுக்க படமானது நம் இழுப்புக்கு ஏற்றவாறு

வருவதை காணலாம்.


அடுத்து உள்ளது Prespective Tool. அதைப்பார்ப்போம்.


இந்த டூலை பயன்படுத்தி படத்தின் மூலையில்

உள்ள சதுரத்தை உள்புறம் இழுக்க படமானது நீங்கள்

இழுக்கும் திசையில் சுருங்குவதை காணலாம்.

படமானது V-Shape -ல் உருவாவதை காணலாம்.


கீழ்புறம் படத்தை சுருக்கினால் வரும்படம் மேலே...

பக்கவாட்டில் படத்தை சுருக்கினால் வரும்படம் மேலே.
மேல்புறம் படத்தை சுருக்கினால் வரும் படம் மேலே...

பதிவின் நீளம் கருதி பாடத்தை இத்துடன் முடிக்கின்றேன்.

JUST FOR JOLLY PHOTOS

பதிவுகளை படித்துப்பாருங்கள். பிடித்திருந்தால்

ஒட்டுப்போடுங்கள்.

வாழ்க வளமுடன்:,

வேலன்.

வலைப்பூவில் உதிரிப்பூக்கள்.

(போட்டோஷாப் பற்றி)

மூம்மூர்த்திகள் உள்ளது போல் போட்டோவில்

மொத்தம் மூன்று கலர்களே உள்ளன. அவை

RGB எனப்படும் RED,GREEN,BLUE என்பனவே

அவை.இவை ஒவ்வோன்றும் 256 shadow கொண்டு

உள்ளது. அவைகள் மூன்றும் சேரும்போது

நமக்கு 256x256x 256 என மொத்தம் 16777216 நிறங்கள்

கிடைக்கும்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

போட்டோஷாப் பாடங்கள்-5(Free Transform Tool)

போட்டோஷாப் அடிப்படை பாடங்கள்:-5
(Free Transform Tool)




இதுவரை போட்டோஷாப்பில் நான்கு பாடங்கள்

வரையிலும் அதில் உள்ள மார்க்யூ டூலையும்

பார்த்து வருகின்றோம்.உங்கள் வசதிக்காக முதல்

நான்கு பாடங்களையும் இங்கு இணைத்துள்ளேன்.


போட்டோஷாப் முதல் பாடம்-1

போட்டோஷாப் இரண்டாம் பாடம்-2

போட்டோஷாப் மூன்றாம் பாடம்-3

போட்டோஷாப் நான்காம் பாடம்-4

இன்று Free Transform பற்றி பார்ப்போம்.

போட்டோஷாப் டூல்களில் முக்கியமான

டூல்களில் இதுவும் ஒன்று. இருப்பதை

பெரியதாகவும் - பெரியதை சிறியதாகவும்

இதன் மூலம் எளிதில் மாற்றலாம். அது

போல் ஒரிடத்தில்இருந்து மற்ற இடத்திற்கு

எளிதில் மாற்றவும் இந்த டூல் நமக்கு உதவும்.

முதலில் இதில் உள்ள வசதிகளை ஒவ்வொன்றாக

பார்க்கலாம்.

முதலில் ஒருபடத்தை தேர்வு செய்து அதை நகல்

எடுத்து - ஒரிஜினலை வைத்துவிட்டு நகலை 

ஒப்பன் செய்யவும். பின் அதை மார்க்யூ டூலால்

தேர்வு செய்யவும். 


 நான் தஞ்சை பெரிய கோயிலை தேர்வு செய்துள்ளேன்.

அதில் உள்ள சிவசிவ என்கிற பெயர்பலகையை மட்டும்

மார்க்யூ டூலால் தேர்வு செய்துள்ளேன்.





பின் அதில் கர்சரை வைத்து ரைட் கிளிக் செய்தேன். 




உங்களுக்கு இந்த மாதிரியான விண்டோ ஓப்பன் ஆகும்.

அதில் உள்ள Free Transform கிளிக் செய்யுங்கள். 

இப்போது ஏற்கனவே நீங்கள் தேர்வு செய்த சிவசிவ

என்கிற பெயர் பலகையை சுற்றி சிறுசிறு கட்டங்களும்-

அதன் நான்கு மூலைகளில் சிறிய சதுரமும்- அதிலுள்ள

இரண்டு சதுரங்களின் இடையே ஒரு சதுரமும் 

ஆக மொத்தம் உங்களுக்கு 8 சதுரங்கள் காட்சியளிக்கும்.

செய்து பாருங்கள். 8 சதுரங்கள் உங்களுக்கு வருகின்றதா?

8 சதுரங்கள் உங்களுக்கு வந்தால் நீங்கள் சரியானபடி

பின்தொடர்ந்து வருகிறீர்கள் என கூறலாம். 

இனி அந்த சதுரங்களில் ஏதாவது ஒன்றை மவுஸால்

பிடித்து இழுங்கள். படம் பெரிதாகின்றதா? அதுபோல்

அனைத்து சதுரங்களையும் ஒரே மாதிரி இழுங்கள்.



உங்களுக்கு சிவசிவ பெயர்பலகை எவ்வளவு பெரியதாக

மாறிவருகிறது என பாருங்கள். அடுத்து வலப்புறம் கீழ் 

மூலையில் உள்ள சதுரத்தை அப்படியே இடப்புறம் உள்ள

சதுரத்தின் மூலையை தாண்டி எடுத்துச்செல்லுங்கள்.

படமானது ஏற்கனவே உள்ளதிலிருந்து பிரிந்து 

இடப்புறம் இடம்மாறி வருவதை அறியலாம்.



இதைப்போலவே படத்தை கீழே இருந்து மேல் நோக்கியும்


மேலிருந்து கீழாகவும்  நகர்த்தி வைக்கலாம்.


அடுத்து Free Transform டூலில் உள்ள மற்ற உப டூல்களை

பார்ப்போம். மார்க்யூ டூலால் படத்தை தேர்வு செய்து

பின் கர்சர் வைத்து கிளிக் செய்தால் உங்களுக்கு கீழ் கண்ட

விண்டோ ஓப்பன் ஆகும்.


அதில் முதலாக உள்ளது Scale ஆகும். இதை நீங்கள்

தேர்வு செய்ததும் உங்களுக்கு File,.Edit ,Image  போன்ற

கட்டளை டூல்கள் உள்ள Menu Bar கீழ் Option Bar பார்த்தால்

உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ தெரிய வரும்.



இதில் X  - AXIS,  Y-AXIS, W-WIDTH %, H-HIGHT % ,<-ANGLE, 

 H-HORIZONTAL,  V-VERTICAL , என அளவை மாற்றக்கூடிய

கட்டங்கள் இருக்கும். அதில் x-axis அளவை மாற்றினால்

படம் x-axis-ல்(பக்க வாட்டில்-படுக்கை வசத்தில்)

 நகர்வதை பார்க்கலாம். அதுபோல் y-axis அளவை 

மாற்றினால் படம் y-axis-ல் மேல்நோக்கி நகர்வதை

 காணலாம். அதுபோல் width உள்ள % அளவை 

மாற்றினால் படம் அகலத்தில் மாறுவதை காணலாம்.




இதில் மேலே உள்ள படத்தில் நந்தியை பாருங்கள். 

width %  மாற்றியபின் கீழே உள்ள படத்தில் நந்தியை

பாருங்கள். வித்தியாசத்தை உணர்வீர்கள..



அடுத்து கோணம்(Angle). இதில் உள்ள கோணத்தை மாற்றம்

செய்வதின் மூலம் படத்தை நமக்கு தேவையான கோணத்தில்

மாற்றிக்கொள்ளலாம். கோணங்களிலும் Horizontal Degree,

Vertical Degree நமக்கு தேவையானதை அமைத்துக்கொள்ளலாம்.

சரியான அளவுகளில் படம் அமைக்க இந்த Scale உபயோகிக்

கலாம். ஆனால் நமக்கு கண் பார்க்க -மவுஸால் தேர்வு

செய்வதுதான் சுலபமாக இருக்கும். அதில் நாம் நிபுணராக

மாற்றியபின் Scale அளவுபடி படத்தை அமைக்கலாம்.

Scale மூலம் படத்தை மாற்றாமல் மவுஸாலேயே

படத்தை மாற்றுவது என அடுத்த பாடத்தில் பார்க்கலாம்.

பதிவு நீளம் கருதி பாடத்தை இத்துடன் முடிக்கின்றேன்.

பாடத்தை படியுங்கள். பதிவு பிடித்திருந்தால் ஓட்டு

போடுங்கள்.

வாழ்க வளமுடன்,

வேலன்.

வலைப்பூவில் உதிரிப்பூக்கள்

(போட்டோ ஷாப்)

Free  Transform Tool Select செய்ய Ctrl+T அழுத்தினால்

போதுமானது. உங்களுக்கு Transform Tool Open

ஆகும். அதுபோல் போட்டோஷாப் திறந்தபின்

வெற்றிடத்தில் மவுஸால் டபுள் கிளிக் செய்ய 

நீங்கள் கடைசியாக திறந்த படத்தின் போல்டர் 

ஓப்பன் ஆகும்.

பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

பக்கங்கள்

பிரபலமான இடுகைகள்